மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியப் பேனாநண்பர் பேரவை உதவி
மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியப் பேனாநண்பர் பேரவை ₹ 40000/_உதவி வழங்கியது.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை பகுதியில் ஏற்ப்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்கள் அனைவருமே தமிழர்கள் ஆகும். 65 பேர் மரணமடைந்த நிலையில், வீடு மற்றும் உடைமைகள் இழந்த 86 பேர் நிராதரவாய் தவித்து வந்த நிலையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்க இந்தியப் பேனாநண்பர் பேரவை நண்பர்கள் சார்பாக ₹ 40000/_ வழங்கப்பட்டது.
பேரவையின் கேரளா மாநிலக்கிளை அமைப்பாளர் வி.பி. சிவன், கோட்டயம் தமிழர் நலச்சங்கம் மற்றும் கேரள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நிவாரண உதவிகள் அளிக்க பெருமுயற்சி எடுத்து உழைத்தார்.பல்வேறு தரப்புகளிலிருந்தும் உதலிகள் பெற்று நிவாரணப் பொருட்கள் வாங்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுடன் இந்தியப் பேனாநண்பர் பேரவை ,கேரளா மாநிலக்கிளை அமைப்பாளர் வி.பி. சிவன், கோட்டயம் தமிழர் நல்வாழ்வு சங்கப் பொருளாளர் ஜெகன், வேலுச்சாமி, செல்வகணேஷ், கோவிந்தராஜ், ராஜாமணி, சவுந்தரராஜன் ஆகியோர் இன்று மூணாறு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
பெருந்துயரில் இருந்த மக்கள், மனிதநேய உதவிகள் வழங்கிய அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
மா.கருண்.தலைவர்,
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை,
02. 09. 2020.