திருவாரூர் மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ந. பவுல்பாஸ் அவர்கள் தலைமைக்கு அளித்த விண்ணப்பத்தில் திருத்துறைப்பூண்டி, பனையூர் ஊரைச் சேர்ந்த தினேஷ்பாபு (வயது 20) என்ற மாணவன் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிட்சை பெறுவதாகவும், ஏழ்மை காரணமாக மருத்துவச் செலவுக்கு மிகுந்த சிரமத்தில் உள்ளதாகவும், நமது பேரவை சார்பாக சிறு உதவியேனும் எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு பேசி குடும்பத்தின் ஏழ்மைநிலை உணர்ந்து தலைமையின் சார்பாக ₹ 5000/_ , திருவாரூர் மாவட்டப் பேரவைக்கிளை சார்பாக ₹ 5000/_ என ₹ 10000/_ மருத்துவச் செலவுக்கு அளிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை திருவாரூர் மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ந. பவுல்பாஸ்,பேரவை நண்பர் ச. சந்தோஷ் இருவரும் மருத்துவமனைக்குச் சென்று ரூ. பத்தாயிரத்தை [ ₹ 10000/_ ] விபத்துக்குள்ளான தினேஷ்பாபுவின் தாயாரிடம் வழங்கி, அவர் விரைவில் பூரண நலம்பெற பேரவை நண்பர்களின் ஆசியையும் தெரிவித்தனர்.
மா. கருண். தலைவர், 15. 04. 2021.