அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
Humanitarian Services Details
கரூர் மாவட்டப் பேரவைக்கிளை நேத்ரா அறக்கட்டளை கட்டிடங்களுக்கு நன்கொடை - ஏப்ரல் 2021
  • கரூர்

22. 04. 2021

இந்தியப் பேனாநண்பர் பேரவை, கரூர் மாவட்டக்கிளை அமைப்பாளர் இரா. திருமூர்த்தி அவர்களும் பேரவை நண்பர் ஐயா மேலை பழனியப்பன் அவர்களும் இணைந்து பேரவைத் தலைமைக்கு இன்று  அனுப்பியுள்ள விண்ணப்பம்.

 மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் அவர்களுக்கு வணக்கம். கரூர் சணபிரட்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் "நேத்ரா அறக்கட்டளை முதியோர் இல்லம்" புதிதாக கட்டியுள்ள கழிப்பறை, குளியலறை கட்டிடங்களுக்கு இரும்பு கதவுகள்  10 தேவைபடுவதாக காப்பக நிர்வாகி திரு. மணிமொழி அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் நாங்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து உண்மைநிலை அறிந்து  வந்தோம். பேரவைத் தலைமையகம் சார்பாக சிறு உதவி செய்ய வேண்டுமென பரிந்துரை செய்கிறோம்.

இரா. திருமூர்த்தி. அமைப்பாளர் தமிழ்ச் செம்மல் மேலை பழனியப்பன் மேற்படி விண்ணப்பம் பேரவைத் தலைமை நிர்வாகிகளால் உடனடியாக பரிசீலிக்கப்பட்டது. கரூர் மாவட்டப் பேரவைக்கிளையின் பரிந்துரை ஏற்று, கரூர் நேந்ரா  அறக்கட்டளை முதியோர் இல்ல புதிய கழிப்பறை மற்றும் குழியலறை கட்டிடங்களுக்கு   4 கதவுகள் பேரவை சார்பாக  நன்கொடை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேத்ரா அறக்கட்டளை பெயரில், பேரவையின் காசோலை அமைப்பாளர் இரா. திருமூர்த்தி அவரகளுக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.

மா. கருண். தலைவர், இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.

************************************************************************************************************************      

28. 04. 2021

இந்தியப் பேனாநண்பர் பேரவை.மும்பை. 9892035187, கரூர் மாவட்டக்கிளை.


பேரவைத் தலைவர் அனுப்பிய அருட்கொடை காசோலை கிடைக்கப் பெற்றேன்.   

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்ததினத்தில் ( 29.4.2021 வியாழன்) மதியம் 12.30 மணியளவில் கருவூர் சணபிரட்டி  தொழிற்பேட்டை, நேத்ரா முதியோர் காப்பக குழியலறை, கழிப்பறைகளுக்கு கதவுகள் அமைக்க பேரவை சார்பாக நிதியுதவி அளித்தல்,  கொடையாளர்களின் மகிழ்வுத்தொகை மூலம் காப்பகத்தில் வாழும் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு, பழங்கள் வழங்கி ஆறுதல்படுத்துதல் நிகழ்வுகளில்  அனைத்து நண்பர்களும் கலந்து மனிதநேயச் சேவையில் இன்புற அன்புடன் அழைக்கிறோம்.

அருட்கொடை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.

இரா. திருமூர்த்தி,

அமைப்பாளர் கரூர் மாவட்டக்கிளை

இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை.

************************************************************************************************************************    

29. 04. 2021

 
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187கரூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நேத்ரா முதியோர் அறக்கட்டளைக்கு  இந்தியப் பேனாநண்பர் பேரவை கரூர் மாவட்டக்கிளை, கருவூர் திருக்குறள் பேரவை அன்பர்கள் இணைந்து  கழிவறை - குளியலறைகளுக்கு பத்து கதவுகள், சானிடைசர் பத்து பாட்டில், மாஸ்க் 50கொரோனா உடை  ரெட்கிராஸ் வழங்கியது - 2 செட், மா, பலா வாழைப்பழங்கள், சிறப்பு மதிய உணவு  வழங்கினர்.   

இந்தியப் பேனாநண்பர் பேரவை கருவூர் மாவட்டக் கிளை அமைப்பாளர் முனைவர் இரா.  திருமூர்த்தி, திருக்குறள் பேரவைச் செயலர் மேலை பழநியப்பன், பா.கி.தங்கராசு, அகல்யா மெய்யப்பன், நிர்மலா பாலு,  சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.

நேத்ரா அறக்கட்டளை நிர்வாகி மணிமொழியன் அனைவரையும் வரவேற்றார்.