இந்தியப் பேனா நண்பர் பேரவை கரூர் கிளை சார்பாக இன்று 24.4.2021 சனிகிழமை காலை கரூரில் வையாபுரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு 200 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பு கபசுரகுடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கி விழிப்புணர்வுடன் தற்காத்துக் கொள்ள வலியுறுத்தப்பட்டது.
இந்த சேவை பணிகளில் நண்பர்கள் மேலை.பழனியப்பன், ரவிக்குமார் , அண்ணாமலை, அட்வகேட் கார்த்திகேயன் , பரணி தரன், மற்றும் திருமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர்.
பொதுமக்களும் பேருந்து பயணிகளும் ஆர்வமாக கபசுர குடி நீர் அருந்தி இந்திய பேனா நண்பர் பேரவையின் நண்பர்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
- இந்தியப் பேனா நண்பர் பேரவை, கரூர் கிளை.