அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
Humanitarian Services Details
ஏழைக் குடும்பப் பெண்களுக்கு பேரவை சார்பாக தையல் எந்திரங்கள் - ஜூலை 2021
  • மும்பை

22. 07. 2021:

பேரியக்கத்தின் பெருமைமிகு நட்பு நெஞ்சங்களுக்கு:

இதய வணக்கம். நமது பேரவையின் சமூக நலச் செயல் திறனின் வரலாற்றுச் தொடர்ச்சியாக, கொரோனா பொதுமுடக்கத்தால் வருமானமின்றி  வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டுள்ள  இரு ஏழைக் குடும்பப் பெண்கள் உதவி வேண்டி, சமூகசேவகி திருமதி கி. ஜெயந்தி மூலமாக  நமது செயற்குழு உறுப்பினர் திருமதி. பா. மலர்விழி பரிந்துரையுடன்,  அனைவரும் நமது அலுவலகம் வந்து  பேரவைத் தலைவரை சந்தித்து, தையல் தொழில் தெரியும், தையல் எந்திரம்  கிடைக்கச் செய்தால்  வாழ்வாதாரம் சீரடையும். பேரவை உதவ வேண்டும்  என்று விண்ணப்பம் அளித்தனர்.

மனிதநேய உணர்வுடன் அவர்களின் குடும்பச் சூழலைக் கேட்டறிந்த நம் தலைவர், தலைமை நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் இரு ஏழைப்பெண்களுக்கும் தையல் எந்திரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஜெ. ஜாண் கென்னடி, பொதுச்செயலாளர்.

=====================================================================================

26. 07. 2021:

பேரியக்கத்தின் பெருமைமிகு நட்பு நெஞ்சங்களுக்கு :

இதய வணக்கம்.

கொரோனா பொதுமுடக்கத்தால் வருமானமின்றி  வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டுள்ள  இரு ஏழைக் குடும்பப் பெண்கள் தையல் எந்திரங்கள் வேண்டி, நமது செயற்குழு உறுப்பினர் திருமதி. பா. மலர்விழி அவர்கள் பரிந்துரையுடன் தலைமைக்கு அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்க்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் தையல் எந்திரங்கள் [ SINGAR ] வழங்கும் நிகழ்வு    28. 07. 2021  புதன்கிழமை மாலை 5 மணிக்கு  நமது அலுவலகத்தில் பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெறும்.

கோவா மாநிலப் பேரவைக்கிளை அமைப்பாளர்  வே. சிதம்பரம், கோவா மாநிலப் பேரவை  உறுப்பினர் ஆர். பழனிச்சாமி [ தலைவர், கோவா தமிழ்ச் சங்கம் ] ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து தையல் எந்திரங்களை வழங்கி  சிறப்பிக்கின்றனர்.

ஜெ. ஜாண் கென்னடி, பொதுச்செயலாளர்

பேரவையின் மனிதநேயப் பணியில் பங்களிப்பு ஏற்ற நட்புகளுக்கு இதய அன்பு:

திரு. ஆ. பிரமநாயகம்                  ₹ 1000/_

திருமதி. பா. மலர்விழி              ₹ 1000/_

திரு. சி. சிவ. பிரேம்பிரகாஷ்  ₹ 500/_

=====================================================================================

28. 07. 2021:

பேரியக்கத்தின் பெருமைமிகு நட்பு நெஞ்சங்களுக்கு:

இதய வணக்கம், நமது பேரவையின் சமூக நலச் செயல் திறனின் வரலாற்றுச் தொடர்ச்சியாக கொரோனா பொதுமுடக்கத்தால் வருமானமின்றி  வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டுள்ள  இரு ஏழைக் குடும்பப் பெண்களுக்கு நமது பேரவை சார்பாக  தையல் எந்திரங்கள் (SINGAR) வழங்கும் நிகழ்வு இன்று  (28.07.2021 புதன்கிழமை) மாலை 5 மணிக்கு  நமது அலுவலகத்தில் பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெறும்.

கோவா மாநிலப் பேரவைக்கிளை அமைப்பாளர் திரு. வே. சிதம்பரம், கோவா மாநிலப் பேரவை  உறுப்பினர் திரு. ஆர். பழனிச்சாமி (தலைவர், கோவா தமிழ்ச் சங்கம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து தையல் எந்திரங்களை வழங்கிச் சிறப்பிக்கின்றனர். 

ஜெ. ஜாண் கென்னடி, பொதுச்செயலாளர்,

இந்தியப் பேனாநண்பர் பேரவ. மும்பை.

9892035187.