இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை,9892035187.
கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை.
சமீபத்திய வெள்ளம், மழை காரணமாக எளிய மக்களின் ஜீவாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேரவைத் தலைமையின் ஆலோசனைப்படியும், துணைத்தலைவர் முனைவர் சி.சிவ.பிரேம்பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர் திருமதி என். மீனாட்சி [9965217935] அவர்களின் முன்னெடுப்பில்.........
இன்று (20.11.21) காலை 11 மணியளவில் கிருஷ்ணகிரி நகர் அருகில் உள்ள முல்லை நகரில் சுமார் 80 குடும்பங்கள் கண்டறியப்பட்டு, உணவுப் பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கி உதவிடப்பட்டது.
நமது கிருஷ்ணகிரி மாவட்ட நண்பர் திரு. வி. குப்புசாமி [9442219990] அவர்கள் உடனிருந்து செயல்பட்டு பேரவைக்குப் பெருமை சேர்த்தார்.
மனிதநேயச் சமூகப் பணிகளில் கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை தொடர்ந்து முனைப்புடன் பணி செய்வது பாராட்டுக்குரியது.
பேரவை நண்பர்கள் திருமதி என். மீனாட்சி, திரு. வி. குப்புசாமி இருவரின் சிறப்பான பணிகளுக்கு இதய நல்வாழ்த்துகள்.
மா. கருண். தலைவர்.
20. 11. 2021.