மும்பை, மான்கூர்டு மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பக [ 272 பேர் ] முதல்வர் திரு. ரத்னாகர் உக்கே அவர்கள் பேரவைத் தலைமையைத் தொடர்பு கொண்டு, குழந்தைகள் " மிசல் (மராத்திய உணவு) சாப்பிட விரும்புகிறார்கள், அதற்கான மூலப்பொருள் {மிசல் சிவ்டா} பேரவை சார்பாக தாருங்கள் எனக் கேட்டார்.
கடந்த 23 ஆண்டுகளாக, அந்த காப்பக குழந்தைகளுக்கான பல்வேறு தேவைகளை மனமுவந்து பூர்த்தி செய்து செயல்படும் நமது " இந்தியப் பேனாநண்பர் பேரவை " சார்பாக உடனடியாக 5 கிலோ மிசல் சிவ்டா வாங்கி, பேரவைப் பொருளாளர் கோ. செல்லத்தம்பியும், நானும் காப்பகம் சென்று முதல்வரிடம் வழங்கினோம்.
நமக்கு மனிதநேயம் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும்.
மா. கருண். தலைவர்.
28.12.2021