இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு, தலைமை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் திருமிகு. மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது குமரி மண்டலப் பேரவைக்கிளை அமைப்பாளர் தா.தேவதாஸ், கேரளா பேரவை நண்பர் எம். ரமேஷ் இருவரும் இணைந்து, பரிந்துரைத்து அனுப்பியுள்ள மருத்துவ உதவிக்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ₹ 10000/_ வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ₹ 10000/_ த்திற்கான காசோலை நண்பர் தேவதாஸ் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
குமரி மண்டலப் பேரவைக்கிளை அமைப்பாளர் தா.தேவதாஸ், பேரவை நண்பர்கள் கேரளா எம். ரமேஷ்,கன்னியாகுமரி தே. தீபு ஆகியோர் இணைந்து,பேரவையின் மருத்துவ உதவியாக ₹ 10000/_ த்திற்கான காசோலையை ஏழை பயனாளிக்கு வழங்கிய போது..
20. 02. 2022.