இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
பேரவைக் குடும்ப உறவுகள் கவனத்திற்கு :
குமரி மண்டலம், களியக்காவிளை ஊரைச் சேர்ந்த செவிலியர் கல்லூரி மாணவி ஜினி அவர்கள், கல்வி உதவித்தொகை வேண்டி பேரவைக்கு அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, மண்டல நண்பர்கள் பங்களிப்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று (28.01.2023) மாலை 4 மணிக்கு பேரவை நண்பர் மருத்துவர் T. இராஜேந்திரன் அவர்களின் மருத்துவமனை அரங்கில் { இராஜேந்திரா மருத்துவமனை, மூலச்சல், தக்கலை} வைத்து பேரவைத் தலைவர் மா. கருண் அவர்களால் மாணவிக்கு ₹ 10000/_ கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. நிகழ்வுக்கு மண்டலப் பேரவைக் கிளை அமைப்பாளர் தா. தேவதாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் முனைவர் தா. ஜெனிவா, மருத்துவர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குமரி மண்டலப் பேரவைக் குடும்ப உறவுகள் நிகழ்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன். நண்பர்கள் கே. ரவி (மும்பை), திருமதி ஷியா ரெஜின், கே. ஜெயகர்ணன் ஆகியோர் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
தலைவர்.
******************************
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
கன்னியாகுமரி மண்டலப் பேரவைக்கிளை :
குமரி மண்டலப் பேரவைக் கிளை சார்பாக, பேரவை உறுப்பினர் மருத்துவர் இராஜேந்திரன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை ₹ 10000/_ வழங்கும்விழா, மருத்துவர் T. இராஜேந்திரன் அவர்களின் மருத்துவமனை அரங்கில் { இராஜேந்திரா மருத்துவமனை, மூலச்சல், தக்கலை } பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மண்டலப் பேரவைக் கிளை அமைப்பாளர் தா. தேவதாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் முனைவர் தா. ஜெனிலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரவை நண்பர்கள் மும்பை கே. ரவி, ஜி. ஜெயகர்ணன், திருமதி ஷியா ரெஜின், தே. தீபு மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
மா.கருண்.தலைவர்.
28.01.2023