இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
திருச்சி மண்டலப் பேரவைக்கிளை.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 532 / 600 { 88. 6% } மதிப்பெண்கள் பெற்றுள்ள பேரவைக் குடும்ப இளவல் பா.கலைச்செல்வி [ D/o. T. BALACHANDRAN ] அவர்களுக்குப்*_ *பேரவை சார்பான கல்வி ஊக்கத்தொகை ₹ 5000/_ வழங்கும் நிகழ்வு 14.07.2023. சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் கா.வெ. தியாகசாந்தன் அவர்கள் இல்ல வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் ஊக்கத்தொகை காசோலையை மாணவிக்கு வழங்கி வாழ்த்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற மண்டலக்கிளை நண்பர்கள் கலந்துரையாடலின்போது ,புதுக்கோட்டை மாவட்டப் பேரவை நண்பர்கள் வி. பெருமாள், பி. அய்யண பிள்ளை, கே. ரெங்கசாமி, ஏ. ஜஸ்டின் ஆகியோர் புதுடில்லி நட்புச் சங்கம விழா சிறப்புகளையும், அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் அவர்களின் அயர்விலாப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டினர். விரைவில் 15 உறுப்பினர்களுடன் புதுக்கோட்டை மாவட்டப் பேரவைக்கிளை செயல்பட முயற்சிகள் தொடர்வதாகவும், செப்டம்பர் 24ஆம் தியதி கிளைக்கான அங்கீகார விழா பேரவைத் தலைவர் தலைமையில் விமரிசையாக நடத்தவும், தலைமை நிர்வாகிகள் விழாவில் பங்கேற்கவும் தலைமையின் ஒப்புதல் வேண்டினர்.
தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் அவர்கள் மேற்பார்வையில் பணிகளை முன்னெடுக்கப் பேரவைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
மேனாள் அறங்காவலர் ஆ. கந்தன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முகவரி மாற்றம் வேண்டினார்.
மண்டலப் பேரவைக்கிளை அமைப்பாளர் பா. மனோகரன் நன்றியுரையாற்ற, தேநீர் விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.