நாகப்பட்டினம் மாவட்ட இந்தியப் பேனாநண்பர் பேரவை நண்பர் ஆர். பாலு அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொல்லியல் துறை ஆணையர் திருமிகு த.உதயசந்திரன் இ.ஆ.ப அவர்கள் Hi tech smart வகுப்பறையில் WiFi மூலமாக கைபேசியை இணைக்கும் வசதியை தொடங்கி வைத்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றினார். ஆசிரியர்களுக்கும், Neatness award பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப்பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்.