ஏழை அன்றாடத் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பொதிப்பைகள் வழங்குதல் - மும்பை
நாட்டின் இயல்புநிலைச் சூழ்நிலைகளும், மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும் நம்மைப் போன்ற மனிதநேய சிந்தனையாளர்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
நமது இந்தியப் பேனாநண்பர் பேரவை அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள பல ஏழை அன்றாடத் தினக்கூலி தொழிலாளர்கள் உணவுக்குக் கூட வழியின்றி தவிப்பதாக பேரவைத் துணைத்தலைவர் சிவா சி. வெற்றிவேல் அவர்களை அணுகி வைத்த கோரிக்கையை பேரவைத்தலைவர் மா. கருண், பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி, பொருளாளர் கோ. செல்லத்தம்பி, துணைத்தலைவர் பா. சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சு. பாஸ்கர், திருமதி பா. மலர்விழி ஆகியோர் கலந்தாலோசித்து, முதற்கட்டமாக 60 பேருக்கு அரிசி - 2 kg, கோதுமை மாவு - 2 kg, பருப்பு, சர்க்கரை, தேயிலை, பிஸ்கெட் பாக்கெட்டுகள் அடங்கிய பொதிப்பை வழங்கலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.
பொதிப்பைகளைத் தயார் செய்யும் பணியில் பேரவைத்தலைவர் மா.கருண், துணைத்தலைவர் பா. சதீஷ்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை [ 08.04.2020 ] காலை 10.30 மணிக்கு பேரவை அலுவலகத்தில் வைத்து பொதிப்பைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை துணைத்தலைவர் சிவா சி. வெற்றிவேல் ஏற்றுள்ளார்.
மா.கருண் - தலைவர்,
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை.
05.04.2020
===============================================================================================================================
இன்று 09.04.2020 வியாழன் மாலை 5.30 மணிக்கு இந்தியப் பேனாநண்பர் பேரவை சார்பாக தலைமை அலுவலகத்தில் வைத்து COVID 19 தொடர் ஊரடங்கால் உணவின்றி தவித்த 100 ஏழை பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, தேயிலை அடங்கிய பொதிப்பைகள் { ₹ 300 × 100 = 30000 } வழங்கப்பட்டது.
முதல் பயனாளிக்கு சயான் கோலிவாடா WTT காவல்நிலைய Sr. INSPECTOR Shri. SHAILESH PASALWAR பொதிப்பையை வழங்கி பேரவையின் மனிதநேயப் பணியை துவங்கி வைத்தார்.
பேரவை துணைத்தலைவர் சிவா சி. வெற்றிவேல் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
மா.கருண் - தலைவர்,
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை.
09.04.2020.