அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
பேரவையின் 26ஆவது ஆண்டு துவக்கவிழா மற்றும் பேரவை அலுவலகம் திறப்புவிழா - மாரச் 2020
  • மும்பை

இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 26ஆவது ஆண்டு துவக்கவிழா மற்றும் பேரவை அலுவலகம் திறப்புவிழா  பேரவைத்தலைவர் மா.கருண் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. துணைத்தலைவர் சிவா சி. வெற்றிவேல் வரவேற்புரையாற்றி நிகழ்வுகளை நெறியாள்கை செய்தார்.

தமிழர் நலக் கூட்டமைப்பு, மகாராஷ்டிரா தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கேப்டன் இரா. தமிழ்செல்வன், காமராஜர் உயர்நிலைப்பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரியின் தலைவர் ஏ. ராமராஜா, ஆதிதிராவிடர் மகாஜன சங்க மேனாள் தலைவர் கே. வி. அசோக்குமார் ஆகியோர் இணந்து  பேரவை அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக மும்பை யாதவ மகாசபை தலைவர் ஈ. லெட்சுமணன், கலினா திருவள்ளுவர் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் செ. அங்கப்பன், தமிழர் பாசறை செம்பூர்  தலைவர் ஆ.பி.சுரேஷ்,பாஜக மும்பை செயலாளர் ஆல்வின்தாஸ், பாஜக தென்மத்திய மும்பை மாவட்டச் செயலாளர் எஸ் விவேகானந்தராஜா, கவிஇளவரசு செந்தூர். நாகராஜன்  ஆகியோர் பேரவையின் 25 ஆண்டு சேவைகளையும் சிறப்பான செயல்பாட்டையும் பாராட்டிப்பேசினர்.  காமராஜர் இளநிலைக் கல்லூரி செயலாளர் எம். எஸ். காசிலிங்கம், துணைத்தலைவர் டி.எம். ரெம்ஜிஸ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால்ராஜா, எம். ராஜ்குமார், ஜேக்கப் ஜெயக்குமார்,  கே. வடிவேல், மும்பை மாநகராட்சி தமிழாசிரிர் குழும நிர்வாகிகள் திருமதி அனிதா டேவிட், ஸ்டீபன் எடிசன், கு. ஆறுமுகப்பெருமாள், ஆர். பாலன், கொலாபா தமிழ்ச் சங்க தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நண்பர்கள், செம்பூர் வெ. மகாராஜன், எம்.ஜே.ஜாக்சன், சிவசக்திவேல், நித்யகஜேந்திரன், சரவணக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி, துணைத்தலைவர் பா. சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சு. பாஸ்கர், திருமதி பா. மலர்விழி, பெரவை நண்பர்கள் ந. முத்துகுமார், மு. ராஜசேகர்,பா. முருகன்,என். ரத்தினம், கே. நேதாஜிபோஸ், கே. ராஜா, திருமதி. மாலதி பிரகாஷ், சி.ஸ்டீபன், எஸ். இராமச்சந்திரன், தமிழ்மணி பாலா, டி. கருப்பசாமி,கே. ரவி, ஆர். சிவக்குமார், ஆர். செல்வராஜ், டி.கோயில்ராஜா, பி.சக்தி விநாயகம், எம். எரிக் கௌதம், எம். இசக்கிமுத்து,  பி. ஐயப்பன்* ஆகியோர் இணைந்திருந்து விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். 
 
பேரவைப் பொருளாளர் கோ. செல்லத்தம்பி நன்றியுரையாற்ற, சுவையான இரவு உணவுடன்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.