அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - ஜூலை 2022
  • கிருஷ்ணகிரி

இந்தியப் பேனாநண்பர் பேரவை.மும்பை.   +91 9892035187.

கிருஷ்ணகிரி மண்டலப்  பேரவைக்கிளைச் செய்தி.       

பேரவைத் தலைவர் மனிதநேய மாமணி மா.கருண் அவர்கள் நல்லாசியுடன் கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு, ஓசூர் சுவாதி பள்ளி கூட்ட அரங்கில்  நடைபெற்றது.

பேரவைத் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் அவர்கள் நிகழ்வுக்குத் தலைமையேற்று அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார்.

கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்:

பேரவை அறங்காவலர்களால்  பேரவையின் துணைத்தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள* *முனைவர் திரு.சி.சிவ. பிரேம்பிரகாஷ் அவர்களுக்கும், இணைச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள  திரு.எ. நந்தகுமார் அவர்களுக்கும், செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள   திருமதி.ந. மீனாட்சி* *அவர்களுக்கும் மற்றும் மண்டலகிளை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஆ. சங்கரநாராயணன் அவர்களுக்கும் மண்டல கிளை சார்பாக  சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இணைச்செயலாளர் திரு.எ.நந்தகுமார் அவர்கள் " வெள்ளிவிழா சங்கமம்" நிகழ்வுகளைப் பற்றி விரிவாக பேரவை உறுப்பினர்களிடையே பகிர்ந்ததோடு, சங்கம சிறப்பு மலர் சிறப்பாக வடிமைத்த பேரவைத் தலைவர் அவர்களின் கடுமையான உழைப்பை பற்றி எடுத்துரைத்தார்.  அடுத்த ஆண்டுக்கான சங்கம சிறப்பு மலர் விளம்பரங்களைப்  பெறுவதற்கான முயற்சிகளை இப்பொழுதே தொடங்குமாறு அறிவுறுத்தினார்.

செயற்குழுஉறுப்பினர் திருமதி. ந.மீனாட்சி அவர்கள் வெள்ளிவிழா நட்புச்சங்கம  அனுபவங்களை பேரவை நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்ந்தார்.

பாவலர் திரு. கருமலைத்தமிழாழன்* *அவர்கள் தான் கலந்துகொண்ட  பேரவைச் சங்கமங்களின் இனிய  நினைவலைகளையும், வெள்ளிவிழா சங்கமத்தின் நிகழ்வையும் உறுப்பினர்களிடம் பகிர்ந்து மகிழ்ந்தார். மற்றும் அடுத்த ஆண்டு (2023) டெல்லியில் நடைபெறவிருக்கும் 26வது சங்கம விழாவில் நண்பர்கள் கலந்துகொள்ளுவது, அதற்கான பங்கேற்பு கட்டணத்தை  பிரதி மாதம் செலுத்தி சேமிக்க‌வேண்டுமென எடுத்துரைத்தார்.

பேரவைக் குடும்ப உறுப்பினர்களாக இணைந்திருக்கும் புதிய நண்பர்கள் திருமதி K.E.வசந்தகுமாரி கருமலைத்தமிழாழன், திருமதி N.தமிழ்செல்வி நாகப்பன், திரு S.நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பும் செய்யப்பட்டது.


திரு. S.ராஜன் அவர்களால் இன்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய நண்பர் திரு. M.செந்தில்குமார் அவர்களுக்கும்  பேரவை சார்பாக வாழ்த்தும்,  வரவேற்பும் தெரிவிக்கப்பட்டது.


29-05-2022 அன்று திருமணநாள்  கொண்டாடிய பேரவை துணைத்தலைவர் முனைவர் *C.S.பிரேம்பிரகாஷ்*, திருமதி *P.திலகவதி* தம்பதியினருக்கும், 27-04-2022 அன்று திருமணநாள் கொண்டாடிய திரு.*C.தங்கதுரை* அவர்களுக்கும் மண்டலக்கிளை  நண்பர்கள் சார்பாக வாழ்த்தி அன்பு பரிசு அளிக்கப்பட்டது.


31-05-2022 அன்று பிறந்தநாள் கொண்டாடிய நண்பர் திரு. *P.காளியப்பன்*, 25-04-2022 அன்று பிறந்தநாள் கொண்டாடிய நண்பர் திரு.*V. குப்புசாமி* அவர்களுக்கும் மற்றும்  13-05-2022 அன்று  பிறந்தநாள்  கொண்டாடிய நண்பர் திரு.*R.வேடி* உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகளுடன் பேரவை நண்பர்கள் சார்பாக அன்பு பரிசு அளிக்கப்பட்டது.

வெள்ளிவிழா நட்புச்சங்கமத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் தங்களின் மகிழ்வான தருணங்களை தனித்தனியாக பகிர்ந்து மகிழ்ந்தனர்.

மண்டல ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையுடன் இனிப்பு வழங்கி  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ், துணைத்தலைவர்.

மா.மோகன், கிளை அமைப்பாளர்.

ஆ.சங்கரநாராயணன், மண்டல ஒருங்கிணைப்பாளர்