கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு மற்றும் பரிசளிப்பு விழா, பேரவைத் துணைத் தலைவர் முனைவர் சி.சிவ.பிரேம்பிரகாஷ் அவர்கள் தலைமையில் ஸ்ரீ விஜய் வித்யாலையா மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் 16 . 10 . 2022 ஞாயிறு காலை 10.00 மணிக்கு மாணவ மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
இணைச்செயலாளர் திரு. எ. நந்தகுமார் அவர்கள் சிறப்பான தொடக்கவுரையாற்றி, வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவை நெறியாள்கை செய்தார்.
துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் அவர்கள் தலைமையுரையுடன் வரவேற்புரையாற்றி இன்முகத்துடன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் திரு G. பிரபாகர் [Joint Director of Rural Development (Retd.) ] அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அவரது வாழ்த்துரை அனைவரையும் கவர்ந்தது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற Dr.K.சம்பத்குமார், [ Dean-Administrator Vijay Vidayalaya Groups of Institutions ] நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடி ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். திரு Dr.K.சம்பத்குமார் அவர்களின் கல்விச் சேவையை பாராட்டி, துணைத்தலைவர் முனைவர் திரு சி.சிவ.பிரேம்பிரகாஷ் அவர்கள் விருது வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் தன்னம்பிக்கையான மேடைப்பேச்சும், பாட்டும் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. 13/07/2022 முதல் 31/10/2022 வரை திருமணநாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய பேரவை நண்பர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசும் அளித்து மகிழ்ந்தோம்.
திருமணநாள் கொண்டாடியவர்கள்
பாவலர் கருமலைதமிழாழன்- K. E. வசந்தகுமாரி
E. நந்தகுமார்- S. ஜெயந்தி நந்தகுமார்
V.நாகப்பன்-தமிழ்செல்வி
R. பெரியசாமி
C. முத்துசாமி
V. குப்புசாமி-சுந்தரா குப்புசாமி
பிறந்தநாள் கொண்டாடியவர்கள்
பாவலர் கருமலைத்தமிழாழன் முனைவர் C. S. பிரேம்பிரகாஷ்
V. வேணுகோபால்
சுந்தராகுப்புசாமி
H. ரெத்தினராஜ்
A. ராஜா
N. R. ஆறுமுகம்
V. குப்புசாமி
K. ஆறுமுகசாமி
M. சண்முகம் HM
M. குமாரவேலு.
பேரவை நண்பர் திரு. C. முத்துசாமி அவர்கள் நம் பேரவைத் தலைவரையும், பேரவையையும் பாராட்டி, கவிதைத் தொகுப்பினை சிறப்புடன் படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
பேரவைக் குடும்ப உறவாக இணைந்திருக்கும் புதிய நண்பர் திரு.N.R.ஆறுமுகம் அவர்களை பேரவை நண்பர்களுக்கு பொன்னாடை அணிவித்து அறிமுகம் செய்தோம், பேரவையில் அவரது முதல் உரையை மிகச்சிறப்புடன் நிகழ்த்தினார்.*
76 ஆவது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரவை சார்பாக நடைபெற்ற ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிருஷ்ணகிரி மண்டல மாணவ, மாணவிகள் 23 பேருக்கும் பாராட்டுச்சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள ஊக்கமளித்து உறுதுணையாக இருந்த ஆசிரியைகளான, KAVITHA.S, ESTHER NAOMI. A. ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழுடன் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்புமிகு நிகழ்ச்சி நடத்திட, அரங்கத்தை வழங்கிய Dr.K.சம்பத்குமார், Dean-Administrator Vijay Vidayalaya Groups of Institutions அவர்களுக்கு கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக்கிளை நண்பர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி பல இனிமையான நினைவுகளோடும் சுவையான மதிய உணவுடனும் இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த பேரவை உறவுகள்.
கருமலைத்தமிழாழன்
K.E. வசந்த குமாரி
C. காமராஜ்
A.K. ராசு
K. ஆறுமுகசாமி
S. குழந்தைவேலு
V.குப்புசாமி
C. வீரபத்திரன்
M. சண்முகம்
N.R. ஆறுமுகம்
R. பெரியசாமி
P. காளியப்பன்
V. வேணுகோபால்
C. முத்துசாமி
H. ரெத்தினராஜ்
A. ராஜா
M. குமாரவேலு
V. மனுநீதிசோழன்
K. ரத்தினம்
V. நாகப்பன்
S. ராஜன்
K. சுகுமாரன்
இந்திரா சுகுமாரன்
திலகவதி பிரேம்பிரகாஷ்
S. ஜெயந்தி நந்தகுமார்
S. சிவகுமார்
R. வேடி
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.