இந்தியப் பேனாநண்பர் பேரவை, இராஜஸ்தான் மாநிலக்கிளை தொடக்கவிழா பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில், பிவாடி குல்மொஹர் அரங்கில் நடைபெற்றது.
இராஜஸ்தான் மாநிலக்கிளை அமைப்பாளர் மு. இளங்கோ அனைவரையும் வரவேற்றார். புதுடில்லி மாநிலக்கிளை அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் தொடக்கவுரையாற்றி விழாவை சிறப்பாக நெறியாள்கை செய்தார்.
பேரவை நண்பர்கள் மும்பை செந்தூர். நாகராஜன், பெங்களூரு ஆ.வி.கிப்சன், ஜெ.ஜேசுதாஸ், புதுடில்லி கிளை நண்பர்கள் மற்றும் பிவாடி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பிவாடி கிளை மேலாளர் ஆர். கார்த்திகேயன், வினோத்குமார் நம்பியார், செந்தூர். நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேரவை நடத்திய சர்வதேச ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
பிவாடி தமிழ்ச் சங்கத் தலைவர் ம.பொங்கியப்பன் நன்றியுரையாற்ற சிறப்பான அறுசுவை மதிய உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.
16. 10. 2022.