சர்வதேச தமிழ் அமைப்பான இந்தியப் பேனாநண்பர் பேரவையின், கிருஷ்ணகிரி மண்டலக்கிளை நண்பர்கள் சந்திப்பு ஓசூர் ஶ்ரீவிஜய் வித்யாலயா கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பேரவைத் தலைவர் மா. கருண் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றதுடன் விழாவுக்கான நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக விஜய் வித்யாலயா கல்விக்குழுமத்தின் டீன் முனைவர் கே.சம்பத்குமார், அரிமா முனைவர் ஒய்.வி.எஸ் ரெட்டி, அரசு ஊரக வளர்ச்சித்துறை மேனாள் இணை இயக்குனர் கோ. பிரபாகர், ஓசூர் மக்கள் சங்கச் செயலாளர் சி. காமராஜ் மற்றும் ஓசூர் மக்கள் சங்க துணைத்தலைவர் பி. மணி ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாகப் பேரவையின் பிரான்சு கிளை அமைப்பாளர் பாரீஸ் பார்த்தசாரதி, புதுடில்லி மாநிலக்கிளை அமைப்பாளர் ஆ. பிரமநாயகம், திருச்சி மண்டலக்கிளை அமைப்பாளர் பா. மனோகரன், காமராஜர் காவியம் தந்த கவிஞர் செந்தூர். நாகராஜன், நண்பர் ஆற்காடு ராஜா முகமது, செயற்குழு உறுப்பினர் ந. மீனாட்சி ஆகியோர் கலந்து வாழ்த்துரை வழங்கினர்* _*நிகழ்வில் தமிழ்நாடு அரசு கபிலர் விருது பெற்ற பேரவை உறுப்பினர் பாவலர் கருமலைதமிழாழன அவர்களுகு சிறப்பு பாராட்டு அளிக்கப்பட்டது. கி. சம்பத்குமார் அவர்களுக்கு மாணவர்களின் விடிவெள்ளி என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. ஓசூர் மக்கள் சங்கத்திற்கு ஓசூர் மக்களின் இதயம் என்ற சிறப்பு விருதை ஓசூர் மக்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பி. மணி அவர்களிடம் வழங்கப்பட்டது. இம்மாதம் திருமணநாள், பிறந்தநாள் கண்ட பேரவை நண்பர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மண்டலக்கிளை நண்பர்கள் பரிந்துரை ஏற்று ஏழை மாணவிக்கு ரூ. பத்தாயிரம்( ₹ 10000 ), ஏழை மாணவனுக்கு ரூ. ஏழாயிரம் { ₹ 7000 } கல்வி ஊக்கத் தொகை பேரவைத் தலைமை சார்பாக வழங்கப்பட்டது.
பேரவையின் 2023ஆம் ஆண்டு நாட்காட்டியை பேரவைத் தலைவர் வெளியிட, முனைவர் சம்பத்குமார் பெற்றுக்கொண்டார்.
கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக்கிளையின் துணை ஒருங்கிணைப்பாளராக வி. நாகப்பன் செயல்படுவார் எனப் பேரவைத்தலைவர் அறிவித்தார். விழா நிகழ்வுகளை இணைச்செயலாளர் எ. நந்தகுமார் சிறப்பாக ஒருங்கிணைத்து நெறியாள்கை செய்தார்.
மண்டலக்கிளை அமைப்பாளர் மா. மோகன் நன்றியுரையாற்ற தேனீர் விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.