தமிழ்நாடு அரசு, அயலகத் தமிழர் தினம் ( 11-12 ஜனவரி 2023) நிகழ்வுகளில், பங்கேற்ற இந்தியப் பேனாநண்பர் பேரவைத் தலைவர் மா. கருண், பஹ்ரைன் கிளை அமைப்பாளர் முனைவர் க. பொன் சங்கர பாண்டியன் ஆகியோர் பேரவையின் வெள்ளிவிழா சிறப்பு மலரை அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ். மஸ்தான் அவர்களிடம் வழங்கி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, அறங்காவலர் முத்து செல்வராஜா, கோவா மாநிலப் பேரவை நண்பர் த. இராமர், பஹ்ரைன் கிளை நண்பர் அன்பரசன் ஆகியோர் உடன் உள்ளனர்.
****************************************
தமிழ்நாடு அரசு, அயலகத் தமிழர் தினம் ( 11-12 ஜனவரி 2023) விழாவில், WEST NEW BRITAIN PROVINCIAL GOVERNMENT { Papua New Guinea }பாராளுமன்ற உறுப்பினர் Hon. SASINDRAN MUTHUVEL அவர்களுக்கு இந்தியப் பேனாநண்பர் பேரவையின் வெள்ளிவிழா சிறப்பு மலரை வழங்கி, பேரவையின் 27 ஆண்டு சாதனைச் சரித்திரத்தையும் எடுத்துரைத்த பேரவைத் தலைவர் மா. கருண் அவர்களுடன், பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, அறங்காவலர் முத்து செல்வராஜா, துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ், காஞ்சி மாவட்டப் பேரவைக் கிளை அமைப்பாளர் இராம. துரை, கோவா மாநிலப் பேரவை நண்பர் த. இராமர் ஆகியோர் உள்ளனர்.
இந்தியப் பேனா நண்பர் பேரவை. மும்பை. 9892035187.
12.01.2023