அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
திருச்சி மண்டலப் பேரவை நண்பர்கள் சந்திப்பு - ஜனவரி 2023
  • திருச்சி

இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை. 9892035187.

திருச்சி மண்டலக்கிளை:

திருச்சி மண்டலப் பேரவை நண்பர்கள் சந்திப்பு  பேரவை  நிறுவனர்-தலைவர் திருமிகு மா.கருண் அவர்கள் தலைமையில் 22.01.2023, ஞாயிறு காலை 10.30 மணிக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மண்டல அமைப்பாளர் திரு. பா.மனோகரன்  வரவேற்புரை ஆற்றினார்.

தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் அவர்கள் தொடக்க உரையாற்றி நிகழ்வை நெறியாள்கை செய்தார். சிறப்புஅழைப்பாளர்களாகப் பங்கேற்ற கவிஞர் ஆற்காடு* *ராஜாமுகமது  சென்னை,வெ.ராஜா அமைப்பாளர் கோவை மாவட்டக் கிளை, திரு. தா. தர்மராஜ் மேனாள் அறங்காவலர், திரு. திருமூர்த்தி. அமைப்பாளர் கரூர் மாவட்டக்கிளை, கே. ராஜா உறுப்பினர் மும்பை ஆகியோர் நமது பேரவையின் வளர்ச்சி,  சாதனைகளைப் பற்றி அருமையாக உரையாற்றினார்கள். நமது பேரவை  நடத்திய தமிழர் திருநாள் - 2023  சிறப்பு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில்  கலந்து கொண்ட திருச்சி மற்றும் கரூர் மாவட்ட மாணவ மாணவியர்களுக்கு பேரவைத் தலைவர் அவர்கள் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

மேனாள் அறங்காவலர் திரு ஆ.  கந்தன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டப் பேரவைக்கிளை மார்ச்  மாதம் தொடங்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதியளித்தார். புதிய உறுப்பினர்கள்   குமாரி ரஷ்லின் ஷிபானா, முனைவர் திருமதி. லதா ஈஸ்வரி,  கோவை ஆறுச்சாமி ஆகியோருக்கு தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார். கரூர் மாவட்டத்தில் புதிதாக இணைந்த நண்பர் தியாகு அவர்களின் விண்ணப்பத்தை தலைவரிடம் கரூர் அமைப்பாளர் வழங்கினார்.

நமது பேரவைக்கு உலகளவில்  பெருமைமிக்க அங்கீகாரம் மற்றும் தமிழ் நாடு அரசின் மூலம் கிடைத்துள்ளன. அதைப்பற்றியும், பேரவையின் சாதனைச் சரித்திரம், உறுப்பினர்கள் பட்டியல் சீரமைப்பு பற்றியும்,  உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபாட்டுடன் கலந்து  சிறப்பிக்க வேண்டும் என்பதையும் மிகவும் சிறப்பாகத்  தலைவர் எடுத்துரைத்தார்.

திரு. தி. செங்குட்டுவன் அவர்கள் நன்றி உரையாற்ற, மதிய உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

பா. மனோகரன்,
அமைப்பாளர், 
திருச்சி மண்டலக்கிளை.