அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
இராஜஸ்தான் மாநிலக்கிளை நண்பர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2023
  • இராஜஸ்தான்

இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.

பேரவையின் இராஜஸ்தான் மாநிலக்கிளை நண்பர்கள் சந்திப்பு 05-02-2023 ஞாயிறு காலை 11.35 மணியளவில்  பேரவை நிறுவனர்-தலைவர் திரு மா.கருண் அவர்களின் ஆலோசனையின்படி பிவாடி பிக்கானீர் சிற்றுண்டி விடுதியில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு கிளை அமைப்பாளர் திரு.மு. இளங்கோ தலைமை தாங்கினார்.

பேரவை நண்பர்கள் வி. பாலக்குமார், டி. பிரேம்குமார், எஸ்.  இராகவன்,எல். விஜய ராகவன் மற்றும் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்த பேரவை அறங்காவலர் மற்றும் புது தில்லி மாநிலக் கிளை அமைப்பாளர் திரு ஆ. பிரமநாயகம் அவர்கள், பேரவையின் 26ஆவது நட்புச் சங்கம விழாவிற்கான ( 20-21 மே  2023. புதுடில்லி ) முன்னோட்ட விபரங்களை விரிவாக எடுத்துக் கூறி, மாநிலப் பேரவைக் கிளை நண்பர்கள் அனைவரும் விழாவில் கலந்து, முழுஒத்துழைப்பு நல்க வேண்டுமென  வேண்டுகோள் விடுத்தார்.

இராஜஸ்தான் மாநிலக்கிளை நண்பர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து சங்கம நிகழ்வை சிறப்பித்திட  வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நண்பர்கள் தினவிழா - 2023 { 12 மார்ச் / பேரவையின் 29ஆவது ஆண்டு துவக்கவிழா} மாநிலக்கிளை சார்பாக விமரிசையாக, சமூக நலச் செயல்பாட்டுடன் கொண்டாட வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நண்பர் வி. பாலகுமார் நன்றியுரையாற்ற, தேநீர் விருந்துக்கு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

மு. இளங்கோ,
அமைப்பாளர்,
இராஜஸ்தான் மாநிலம் பேரவைக் கிளை. பிவாடி.