இந்தியப் பேனாநண்பர் பேரவை பஹ்ரைன் கிளை தொடக்கவிழா பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பஹ்ரைன் பேரவைக்கிளை அமைப்பாளர் முனைவர் கா. பொன் சங்கர பாண்டியன் வரவேற்புரையாற்றினார். பேரவை நண்பர் சி. பாலசுப்ரமணியன் விழா தொடக்கவுரையாற்றினார். மா. ஜோதிபாசு கருத்தாழமிக்க வாழ்த்துரையாற்றினார். பேரவை உறவுகள் எம். சுவாமிநாதன், இரா.திருப்பதி, மற்றும் பஹ்ரைன் தி.மு.க மேனாள் தலைவர் முத்துசாமி சு. பஹ்ரைன் மனமகிழ் மன்ற நிறுவனர் எஸ். ஹரிகரன், TASCA TOASTMASTERS மன்ற மேனாள் தலைவர் கண்ணன் கதிரேசன், பெலிக்ஸ் ராஜா, ஜெபின், சல்மானியா ரவி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
காலையில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற இளவல்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி பேரவைத் தலைவர் சிறப்புரையாற்றினார். ஏராளமான பெற்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும் குடும்ப உறவுகளுடன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பஹ்ரைன் தமிழ் குரல் சொல்வேந்தர் செல்வி ஷினா சுல்தானா அவர்களின் சிறப்பான நெறியாள்கை விழாவுக்கு சிறப்பூட்டியது.
பேரவை நண்பர் செ. குகநாதன் நன்றியுரையாற்ற, அறுசுவை இரவு விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.