இந்தியப் பேனாநண்பர் பேரவைத் தலைவர் மா. கருண் அவர்களின் ஆலோசனையின் படியும், பேரவையின் விதிமுறைகளுக்குட்பட்டும் புதுதில்லி மாநிலப் பேரவைக் கிளையின் நண்பர்கள் சந்திப்பு தில்லி ரெய்சான சாலையிலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் 18.06.2023 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
மாநிலக்கிளை அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் வரவேற்றுப் பேசினார்.
கடந்த மாதம் புதுடில்லியில் சிறப்பாக நடைபெற்ற 26ஆவது நட்புச் சங்கமம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. வரும் காலங்களில் பேரவை நிகழ்வுகளை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து நண்பர்களும் தத்தம் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
பேரவை சார்பான கல்வி உதவிக்கள் / மற்றும் கிளைச் செலவுகளை ஈடு செய்ய மாதம் தங்களால் இயன்ற ஒரு தொகையை வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை நண்பர் செள. முத்துராசு அவர்கள் தெரிவித்து ₹ 250/_ வழங்கினார்.
சங்கம விழாவை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சந்திப்பு 27. 08. 2023 அன்று நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள்:
1. திரு. ஆ. பிரமநாயகம்
2. திரு. பி. இராமமூர்த்தி
3.திரு.ஆர். இரவிச்சந்திரன்
4 திரு. எம். விநாயகம்
5. திரு.த. நாகராசன்
6. திரு.சௌ. முத்துராசு
7. திரு.ஆர். சந்திரசேகர்
8. திரு.எஸ்.சுப்பையா ராசு
9. திரு.கே. லெனின்.
அனைவரும் தொடர்ந்து பேரவை ஈடுபாட்டுடன் செயல்பட உறுதியேற்கப்பட்டது.
மாலை சிற்றுண்டியுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.
அன்புடன்,
ஆ. பிரமநாயகம்,
அமைப்பாளர்
புது தில்லி மாநிலப் பேரவைக்கிளை.