இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
தமிழர் திருநாள் - 2023, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளில் விடுபட்ட இருவருக்கும் காசோலைகள் பேரவைத் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் அவர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது. இணைச்செயலாளர் எ. நந்தகுமார் அவர்கள் சான்றிதழுடன், காசோலையை குறிப்பிட்ட மாணவச் செல்வங்களுக்கு அனுப்பிடவுள்ளார்.
மாணவ, மாணவியருக்காக பேரவை நடத்திய சுதந்திரதின விழா-2022 / தமிழர் திருநாள்-2023 போட்டிகளில் 124 பேர் வெற்றியாளர்களாகத் தேர்வு பெற்றனர். பிரிவு வாரியாக மொத்தம் ₹ 60350/_ [ ரூ.அறுபது ஆயிரத்து முன்னூற்று ஐம்பது ] ரொக்கப்பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.