பிரான்ஸ், பாரிஸ் ஸிர்ஜி பகுதியில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்புவிழா.
இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் மா.கருண் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இப்பெருவிழாவை வோரேயால் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் இலங்கை வேந்தன், செயலாளர் அலன் கிருஷ்ணராஜ், பொருளாளர் வேல்முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து மிகவும் பிரமாண்டமாக நடத்தி தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்தனர்.
பிரான்ஸ் நாட்டின் இந்தியத்தூதர் ஜாவித் அஷ்ரப், ஸிர்ஜி நகர மேயர் ழான் போல் ழான்தம், புதுவை அமைச்சர் கே. லட்சுமி நாராயணன், புதுவை மேனாள் சட்டப் பேரவைத் தலைவர் வி.பி. சிவக்கொழுந்து, பேசும் பூங்காற்று திருமதி. கவிதா ஜவஹர், நகைச்சுவை நாவலர் புலவர் இராமலிங்கம், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், நேசக்கரம் அறக்கட்டளை தலைவர் இராமேஸ்வரம் எஸ். ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன், குறும்பட இயக்குநர் ரவி குணவதி மைந்தன், சிலை சிற்பி பத்மஶ்ரீ முனுசாமி, இந்தியப் பேனாநண்பர் பேரவை பிரான்சு அமைப்பாளர் பாரீஸ் பார்த்தசாரதி மற்றும் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
மா.கருண்,
நிறுவனர் - தலைவர்,
இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை.
09.12.2023.