இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை. 9892035187
இணை அமைப்பு - ஐபிஎல் செஸ் அகாடமி
ஜுன் மாதத்திற்கான சிறப்பு சதுரங்கப் போட்டி 25-06-2023 ஞாயிற்றுக்கிழமை பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 68 வீரர்கள் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவு, பொதுப்பிரிவு என இரு வகையில் ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றன.
பொதுப்பிரிவில் முதல் பத்து இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் ஷீல்டும் வழங்கப்பட்டது.
பொதுப்பிரிவில் விளையாடிய 11, 15 வயது பிரிவினருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜூனியர் பிரிவில் முதல் பத்து இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு டிராபி, மற்றும் ஷீல்டும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மற்ற வீரர்களுக்கு பங்கேற்பு பதக்கம் வழங்கப்பட்டது.
பரிசுகள் வழங்கும் நிகழ்வில் திரு. பாலகிருஷ்ணன் (Senior Chess Player,TenkasiDt), திரு. மணிவண்ணன் (Ex. President, Kulasekaraptty Panchayat )ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
போட்டி ஏற்பாடுகளை ஐபிஎல் செஸ் அகாடமி இயக்குனர் திரு. எஸ். கண்ணன் ஒருங்கிணைப்பு செய்தார்.