இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்கக் கழகம் [ IPL CHESS ACADEMY ] மும்பை நகர் மாவட்ட சதுரங்க இயக்கத்துடன் இணைந்து மும்பையில் நடத்திய சதுரங்கப் போட்டி {30.12.2023} நிகழ்வில் 186 மாணவ / மாணவியர்கள் பங்கேற்றனர்.
ஐபிஎல் சதுரங்கக் கழக இயக்குனர் ச. கண்ணன் அவர்களின் பயிற்சியில் தாயகத்திலிருந்து பங்கேற்ற 24 சதுரங்க வீரர்கள், மும்பை வீரர்களுடன் சிறப்பாக விளையாடி ஏராளம் பரிசுகளை வென்றனர்.
பரிசளிப்பு விழா நிகழ்வில் மும்பை, வருமானவரித்துறை கூடுதல் ஆணையாளர் திருமிகு. சுரேஷ் பெரியசாமி அவர்கள் ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள், கேடயங்கள், நினைவுப் பரிசுகளை வழங்கி எழுச்சியுரையாற்றினார்.
நிகழ்வில் பேரவை உறவுகள் ம. செல்வராஜ், திருமதி. மாலதி பிரகாஷ், மற்றும் திருமதி. சுலபா கருண், திரு. ஆனந்த் சகாயராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஐபிஎல் சதுரங்கக் கழகத் தலைவர் மா. கருண், பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, நண்பர் கு. ரவி, இயக்குனர் ச. கண்ணன், துணை இயக்குனர் திருமதி. தமிழ்செல்வி கண்ணன், பேரவை ஆர்வலர்கள் திரு. ஈ. சுரேஷ் பிரபாகர், எல். பொன்னம்மாள், மும்பை நகர் மாவட்ட சதுரங்க இயக்கத்தின் செயலாளர் திரு. ராஜா பாபு மற்றும் புதுக்கோட்டை மணிகண்டன்,பாவூர்சத்திரம் மணிவண்ணன், ஆகியோர் நிகழ்வின் ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
செய்தி:
மா.கருண். தலைவர்