கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளைச் செய்தி - ஜனவரி 2021
பேரவைத் தலைவர் மனிதநேய மாமணி மா.கருண் அவர்கள் நல்லாசியுடன் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ.பிரேம்பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி
கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு ஓசூர் காமராஜ் நகர் சுவாதி பள்ளியில், பேரவை நண்பர் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்கள் தலைமையில், திரு. சி. காமராஜ் அவர்கள் முன்னிலையில், சிறப்புடன் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக ஓசூர் சுவாதி பள்ளி தாளாளரும், ஓசூர் மக்கள் சங்கத்தின் தலைவருமான முனைவர் எம். பி. சரவணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நமது அன்பிற்குரிய பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் காணொளி மூலம், மாவட்டப் பேரவை நண்பர்களுக்கும், சிறப்பு விருந்தினர் முனைவர் எம். பி. சரவணன் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்
பேரவைத் துணைத்தலைவர் முனைவர் திரு.சி.சிவ.பிரேம்பிரகாஷ் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து, அனைவரையும் வரவேற்றார். பேரவை நண்பர் திருமதி. கண்மணி அவர்களுக்கு பேரவை சார்பாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம். நண்பர்கள் அனைவருக்கும் பேரவையின் நாள்காட்டி மற்றும் புத்தாண்டு அன்புப்பரிசாக குவளை ஒன்றையும் வழங்கி மகிழ்ந்தோம். நண்பர்கள் அனைவரும் பேரவையின் வெள்ளிவிழா சிறப்பு மலருக்கான விளம்பரங்களை விரைவில் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முனைவர் எம். பி. சரவணன் அவர்கள், நமது பேரவையில் தம்மை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அவரை பாவலர் கருமலைத்தமிழாழன், திரு.சி. காமராஜ் மற்றும் துணைத்தலைவர் முனைவர் திரு.சி.சிவ. பிரேம்பிரகாஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்று வாழ்த்தினர். பேரவை நண்பர் தமிழ் செம்மல் திரு. அ.க.இராசு அவர்கள் மூன்று புதிய நண்பர்களை பேரவைக்கு அறிமுகம் செய்தார். திரு.அ.க. இராசு அவர்களுக்கும் பேரவை சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுதில்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு நிகழ்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட பேரவைக்கிளை ஒருங்கிணைப்பாளர் எ. நந்தகுமார் நன்றியுரையாற்ற, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
செய்தி பகிர்வு:
எ. நந்தகுமார்.