அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
குமரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2024
  • கன்னியாகுமரி

இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை.

9892035187

கன்னியாகுமரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு:

24.02.2024 மாலை 3.00 மணிக்கு பேரவைத் தலைவர் மனிதநேய மாமணி திரு.மா.கருண் அவர்களின் தலைமையில் , குமரி மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர்  திரு.தா‌. தேவதாஸ் அவர்களின் ஸ்வீட் ஹோம் அரங்கில் இனிதே நடைபெற்றது.


குமரி மாவட்டப் பேரவைக்கிளை புரவலர் மருத்துவர் திரு.மா.நெடுஞ்செழியன் அவர்கள் முன்னிலை வகித்தார் ‌.


குமரி மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் திரு.தா. தேவதாஸ் வரவேற்புரை வழங்கினார். சிறப்பான, கருத்தாழமிக்க தொடக்க உரையை திரு.ஜி.ஜெயகர்ணன் வழங்கினார். 
திரு.பி.அருள் ராஜ் அவர்கள் தாம் பேரவையில் இணைந்த குறுகிய காலத்தில் தமது பேரவை அனுபவங்களை அழகாக எடுத்துரைத்து, என்றும் பேரவைக் குடும்ப உறவாகத் தொடர்வேன் என்றார். நண்பர்கள் பேரவையுடனான  தங்களின் அனுபவங்களை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.*

பேரவையின் 30ஆவது ஆண்டு தொடக்க விழாவும் நண்பர்கள் தினவிழாவுமான மார்ச்ச 12- தேதி நிகழ்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது ‌.

மே மாதம் நடைபெற உள்ள நட்புச்சங்கம விழா பற்றிய விவரங்களை பேரவைத் தலைவர் எடுத்துரைத்தார்.

தலைவர் அவர்களின் சிறப்புரையில் நண்பர்கள் அனைவரும் பேரவை ஈடுபாட்டுடன் செயல்பட அறிவுறுத்தினார். பேரவை நண்பர்களின் கருத்துகளுக்கும் தலைவர் விளக்கம் அளித்தார்.

புதிய உறுப்பினர்கள் மூன்று பேர் [ திருமதி. ஜீவா அபிதா மலர், திரு. சுரேஷ், திரு பவுல் ராஜ், ] கலந்து கொண்டதால் பேரவை பற்றிய சிறப்புகள் அவர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது*_ *பேரவை மகளிருக்கு நட்பு சங்கம சீருடைகளைப் பேரவைத் தலைவர் வழங்கினார்.* *பேரவை இணைச்செயலாளர் முனைவர் திருமதி தா.ஜெனிலா நடராஜன் நன்றியுரையாற்ற தேனீர் விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது‌.
 

நிகழ்வில் கலந்து சிறப்பித்த பேரவை நண்பர்கள்:
1 .திரு. வி.எம்‌.ராஜ்
2. திரு. பி. ஜாண்சன்
3 திரு.டி. ஜாண் பாலஸ்
4. திரு. பொ. ராஜூ
5 திரு. ஜி‌. ஜெயகர்ணன்
6. திருமதி. ஜீவா ஜெயகர்ணன்
7. திருமதி சா.ஜெயா
8 திருமதி. ச.பத்மா
9. திருமதி. டி. ‌ராஜம்மாள்
10.திருமதி. பரமேஸ்வரி தேவதாஸ்
11. திரு. வி. எஸ். புஷ்பராஜன்
12. திரு. எஸ். ராஜசேகர்
13. திரு‌. பி. ஜெயசீலன்
14 திரு. ஜி. பவுல்ராஜ்
15. திரு.ஜெ.ஜெ. சுரேஷ்

நிகழ்வில் கலந்து  சிறப்பித்த பேரவை உறவுகளுக்கு பாராட்டுக்கள் ‌மற்றும் வாழ்த்துக்கள் !.