இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்கக் கழகம் [ IPL CHESS ACADEMY ] சார்பாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற சதுரங்கத் திருவிழாவை துவக்கி வைத்து இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் மா. கருண் சிறப்புரையாற்றினார்.
தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேனி மாவட்ட சதுரங்க வீரர்கள் முன்னூறுக்கும் அதிகமானோர் போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி வாரியாக கோப்பைகள், மாடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஐபிஎல் சதுரங்கக் கழகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர. கே. காளிதாசன், செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி, பொதிகை செஸ் அகாடமி தலைவர் வைகை ஆர். குமார், இயக்குனர் எஸ். கண்ணன்,பேரவை அறங்காவலர்கள் முத்து செல்வராஜா, தா. தேவதாஸ், இணைச்செயலாளர் முனைவர் தா. ஜெனிலா நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ. வி. கிப்சன், திருச்சி மண்டலப் பேரவைக்கிளை அமைப்பாளர் பா. மனோகரன், சென்னை மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ரெ. சுரேஷ், புதுக்கோட்டை மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ஆ. கந்தன், தென்காசி மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் சி. பாலசுப்ரமணியன், ஐபிஎல் சதுரங்கம் போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் பி. ஜாண் டேனியல், பேரவை நண்பர்கள் விருதுநகர் எம். மாரிமுத்து, நெல்லை த. ஜெயசீலன், க. கருண், திருமதி. க. தமிழ் செல்வி, அஸ்ஸாம் சு. பாண்டிதுரை, திருமதி. செந்தாமரை செல்வராஜா, எல். கோபால், கே. குமார், டி. லெனின், எம். செல்லப்பா, புதுக்கோட்டை மணிகண்டன், மற்றும் ஏராளமானோர் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.