மும்பை, தமிழ் அமைப்பான இந்தியப் பேனாநண்பர் பேரவை கடந்த முப்பது ஆண்டுகளாகத் தனிச்சிறப்புடன் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் ஆகும்.
சர்வதேச அளவில் கிளைகள் பரப்பி, அன்பு, நட்பு, மனிதநேயம் என்ற சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தி இயங்கும் இந்த இயக்கத்தின் 27ஆவது நட்புச் சங்கம விழா தென்காசி மாவட்டம், குற்றாலம் டி. எம். என். எஸ் அரங்கில் 25.05.2024 சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக, காலை 8.00 மணிக்கு அன்பு, நட்பு, மனிதநேயம், தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் வலியுறுத்தும் பதாதைகள் ஏந்திய அமைதி அணிவகுப்பை பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, பேரவைத் தலைவர் மனிதநேய மாமணி மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை பேரவைக் குடும்ப மகளிரணியினர் மங்கல விளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி துவங்கி வைத்தனர். தென்காசி மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் சி. பாலசுப்ரமணியன் வரவேற்புரையாற்ற, தலைமை செயற்குழு உறுப்பினர் ச. கண்ணன் தொடக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி ஆண்டறிக்கையையும், பொருளாளர் கோ. செல்லத் தம்பி வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். நண்பர்கள் சுய அறிமுகம் மற்றும் நட்பு அனுபவ உரையரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
மதிய உணவுக்குப்பின் நடைபெற்ற கவியரங்கத்தில் பேரவைக் கவிஞர்கள் தாழை க . அங்கமுத்து, மரு. இரா. திருமூர்த்தி ஆகியோர் "மருவுக மாசற்றார் கேண்மை" என்ற தலைப்பில் சிறப்பான கவிதை படைத்தனர். பேரவைக் குடும்ப மகளிரணியினரின் பல்சுவை நிகழ்வுகள் அரங்கேறின. இளவல்களின் தனித்திறன் நிகழ்வில் திருக்குறள் ஒப்பு வித்தல் போட்டி நடைபெற்றது.
1. பா. ஹிரன்மய். ( 23 திருக்குறள் ) மற்றும் தனிப்பாடல்
2. சி. ரிஷிதா ( 20 திருக்குறள் )
3. சி. ஹேமந்த் ( 27 திருக்குறள்)
4. இ. செந்தளிர் ( 4 திருக்குறள்)
5. பா. சின்மய் (தனிப்பாடல்)
6. த. ஐஸ்வர்யா. மும்பை (ஆங்கிலத்தில் உரை)
7. வினோதா ( தலைவர் ஓவியம் வரைந்தது )
மாலை 6 மணிக்கு பேரவையின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் கோலாகலமாகத் துவங்கியது. துணைத்தலைவர் முனைவர் சி. சிவ. பிரேம் பிரகாஷ் வரவேற்புரையாற்றனார். திருநெல்வேலி, சாராள் டக்கர் கல்லூரி சரித்திரத் துறை தலைவர் பேராசிரியை முனைவர் எம். தங்கம் அவர்கள் 27ஆவது நட்புச் சங்கம சிறப்பு மலரை வெளியிட்டும், மும்பை கிரீன் ஹெல்த்கேர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஜாக்சன் அவர்கள் முதல் மலரைப் பெற்றும் வாழ்த்துரை வழங்கினர்.
2023-2024 ஆம் ஆண்டில் ₹ 3,50,000/_ {ரூ மூன்றரை இலட்சம்} கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவி பேரவை சார்பாக வழங்கப்பட்டுள்ளதை சிறப்பு விருந்தினர்கள் குறிப்பிட்டு வாழ்த்தினர்.
பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, பொருளாளர் கோ. செல்லதம்பி, அறங்காவலர்கள் முத்து செல்வராஜா, ஆ. பிரமநாயகம், தா. தேவதாஸ், திருமதி பா. மலர்விழி, துணைத் தலைவர்கள் முனைவர் சி. சிவ. பிரேம்பிரகாஷ், வே. சிதம்பரம், இணைச் செயலாளர்கள் எ. நந்தகுமார், முனைவர் திருமதி தா. ஜெனிலா செயற்குழு உறுப்பினர்கள் செ. பாஸ்கர், து. கோவில் ராஜா, ஆ. வி. கிப்சன், திருமதி. மாலதி பிரகாஷ், திருமதி ந. மீனாட்சி, ச. கண்ணன், அமைப்பாளர்கள் பா. மனோகரன், வே. நாகப்பன், ரெ. சுரேஷ், ஆ. கந்தன், த. தர்மராஜ், கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரு. ஆர். கே. காளிதாசன், திரு. மு சுடலை, திரு. எஸ். ஆர். சுப்பிரமணியன், மருத்துவர் மா. நெடுஞ்செழியன், முனைவர் என். கிருஷ்ணமூர்த்தி, திரு. எஸ். மணிவண்ணன் ஆகியோர் பேரவையின் பெருமைமிகு சாதனைகளை நினைவூட்டி வாழ்த்துரை வழங்கினர். அனைத்திந்திய அளவில் அஸ்ஸாம், புதுடில்லி, கோவா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேரவை நண்பர்கள் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக்கிளை நண்பர்கள் 40 பேர் தனிப் பேருந்தில் வந்து தனித்துவம் படைத்தனர்.
10, 12 வகுப்புகளில் 80℅ மதிப்பெண்கள் பெற்ற பேரவைக் குடும்ப இளவல்களுக்கு ₹ 5000 வீதம் கல்வி ஊக்கத்தொகை பேரவை சார்பாக வழங்கப்பட்டது.
இணைச் செயலாளர் முனைவர் தா. ஜெனிலா அவர்கள் முழு நாள் நிகழ்வையும் நேர்த்தியாக நெறியாள்கை செய்ததுடன் நிறைவாக நன்றியுரையும் ஆற்றினார். சிறப்பான இரவு விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இரவு 8.30 மணிக்குப் பேரவையின் 21ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கம விழாவை சிறப்புடன் நடத்திய நண்பர்கள் ச. கண்ணன், சி. பாலசுப்ரமணியன், திருமதி. தமிழ்ச்செல்வி கண்ணன், பா. ஜாண் டேனியல் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கல்வி ஊக்கத் தொகைக்கான உச்ச வரம்பு 85℅ மதிப்பெண்கள் என்ற திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 28ஆவது நட்புச் சங்கமப் பெருவிழாவை 2025 மே மாதம் 24-25 தியதிகளில், கோவையில் நடத்திட மாவட்ட அமைப்பாளர் த. தர்மராஜ் வைத்த கோரிக்கை ஏற்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
26.05.2024 ஞாயிறு காலை பேரவை உறவுகள் அனைவரும் குற்றாலம் அருவிகளில் இன்ப மயமாக நீராடி, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தரிசனம் செய்து, பாவநாசம் மற்றும் இடங்களைக் கண்டு மகிழ்ந்து மீண்டும் கோவையில் சந்திப்போம் என்ற மனநிறைவுடன் பிரியாவிடை பெற்றனர்.
மா. கருண். தலைவர்
27. 05. 2024