சென்னை மண்டல பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - டிசம்பர் 2024
சென்னை மண்டலப் பேரவைக் கிளை நண்பர்கள் சந்திப்பு 22.12.2024 ஞாயிறு, மாலை 4. 00 மணிக்கு பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
1) சென்னை மண்டலத்தில் ( சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ) பேரவை வளர்ச்சி மற்றும் புதிய உறவுகள் அறிமுகம் குறித்து விவாதித்து, ஒவ்வொருவரும் ஒரு புதிய நண்பரை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
2) சென்னை மண்டல பேரவைக் கிளை உறவுகள், ஒருங்கிணைந்து நட்புத் தொடர்பை பேரவை சார்ந்து மேம்படுத்தி, பேரவைத் தளங்களில் தொடர்ந்து பதிலளித்து இணைந்திருக்க வலியுறுத்தப்பட்டது .
3) புதுக்கோட்டை மாவட்டப் பேரவைக் கிளை வெள்ளிவிழா {18.01.2025} நிகழ்வில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
4) கோவை நட்புச் சங்கம விழா மற்றும் சிறப்பு மலர் - 2025 சார்ந்த பணிகளில் முழு ஒத்துழைப்பு அளித்து, சிறப்பு மலருக்கு அதிகப்படியான விளம்பரங்கள் சேகரித்து அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது .
5) பேரவையின் 31ஆவது ஆண்டு தொடக்கவிழா [நண்பர்கள் தினம் - 12-03-2025] கொண்டாடுவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
6) 2025ஆம் ஆண்டுக்கான பேரவை நாள்காட்டியை பேரவை உறுப்பினர் திருமதி E. ரேகா அவர்கள் வெளியிட பேரவை உறுப்பினர் திருமதி செந்தாமரை முத்து செல்வராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
7) இந்திய தபால் துறை சேவையில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
8) பேரவை நண்பர் திரு சுகுமார் அவர்கள் அறிமுகப்படுத்திய நண்பர் திரு. வி. அரசு அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார் . அவருக்கு பேரவை குறித்து விவரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
9) பேரவைத் தலைவர் மா.கருண் அவர்களை one india tamil செய்தி நிறுவனம் பேட்டி எடுத்து வெளியான Youtube வீடியோ பார்த்து சென்னை நெற்குன்றத்திலிருந்து வந்து நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர் ராஜு அவர்களுக்கும் பேரவை குறித்து விவரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நண்பர்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் :
- மா.கருண்
- முத்து செல்வராஜா
- ரெ. சுரேஷ்
- ஜெ. பொன்னரசு
- உ. ராஜாராம் பாண்டியன்
- முத்துசாமி என்ற ஞானசி
- ம. செல்வசதிஷ்
- திருமதி. எம்
- செந்தாமரை
- குமாரி. இ. இளந்தளிர்
- எம். இளவேனில் பாரதி
- பி. ஜனார்த்தனன்
- திருமதி. இ. ரேகா
- ஜி. சண்முகம்
- எம். குமாரவேலு
- அ. பெருமாள்
- சி. ஜெயச்சந்திரன்
- எஸ். வெங்கடேசன்
- வி. அரசு
- எம்.பி. ராஜு
ரெ.சுரேஷ்,
அமைப்பாளர்,
சென்னை மண்டலப் பேரவைக்கிளை.
23.12.2024