சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு பேரவை அறங்காவலர் திரு. முத்து செல்வராஜா அவர்கள் இல்லத்தில் பேரவைத்தலைவர் திரு மா. கருண் அவர்கள் தலைமையில் இன்று [14.02.2020] மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
பேரவையின் 26ஆவது ஆண்டு துவக்கவிழா [ 12 மார்ச் நண்பர்கள் தினம் - 2020 ], வெள்ளிவிழா சங்கமம் [ 16-17 மே 2020 ] குறித்த முக்கியச் செயல்முறைத் திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. சிறப்பு மலருக்கான விளம்பரங்கள் சேகரிப்பில் சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் பங்களிப்பு அதிகம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.