அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
கன்னியாகுமரி மாவட்டக்கிளை நண்பர்கள் சந்திப்பு - ஜனவரி 2021
  • கன்னியாகுமரி

இந்தியப் பேனாநண்பர் பேரவை, கன்னியாகுமரி மாவட்டக்கிளை நண்பர்கள் சந்திப்பு, 15.01.2021 வெள்ளிக்கிழமை  மாலை 3.30 மணிக்கு சரல், ஸ்வீட் ஹோம் அரங்கில் பேரவைத் தலைவர் மனிதநேய மாமணி மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டப் பேரவைக்கிளைப் புரவலர் மருத்துவர் மா. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.

பேரவை அறங்காவலரும் [TRUSTEE] மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளருமான தா. தேவதாஸ்  வரவேற்புரையாற்றி, குமரி மாவட்டக்கிளையின் சிறப்பான செயல்பாடுகளை விளக்கினார் 

சென்னை மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ரெ. சுரேஷ், ஐக்கிய அரபுக் குடியரசு கிளை உறுப்பினர் நாகர்கோவில் சலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் பங்கேற்றனர்.

வெள்ளிவிழா சங்கமம். { 22-23  மே  2021, மகாபலிபுரம்,} குறித்து விரிவாக எடுத்துரைத்து, குமரி மாவட்ட நண்பர்கள் அனைவரும் சங்கம விழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என நண்பர் ரெ. சுரேஷ் கேட்டுக்கொண்டார்.

குமரி மாவட்டக்கிளையில் புதிய உறவுகளாக  இணைந்துள்ள அ.ரெஜின் பரத், இரா. தனசிங்  இருவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்பும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட நண்பர்கள் வழக்கறிஞர் எஸ். விஸ்வநாதன், வி. மரியந்தோணிராஜ்,  பி. நாராயணதாஸ், சி. முருகேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நண்பர்  பொ. ராஜு நன்றியுரையாற்ற, தேனீர் விருந்துடன் சந்திப்பு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.