அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
வெள்ளிவிழா நட்புச் சங்கம ஆலோசனைக் கூட்டம் - பிப்ரவரி 2021
  • மேட்டூர், சேலம் மாவட்டம்

வெள்ளிவிழா நட்புச் சங்கம ஆலோசனைக் கூட்டம் - 14. 02.2021. ஞாயிறு மாலை 2.30 மணி. 

இடம் :  தாய்த்தமிழ்  தொடக்கப்பள்ளி அரங்கம்.  பவானி முதன்மைச் சாலை, மேட்டூர். சேலம் மாவட்டம்.
மாலை 6.30 மணி - சேலம் மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் திருமதி கு. லஷ்மி  இல்ல திருமண வரவேற்பு விழா.

வெள்ளிவிழா நட்புச் சங்கம ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவர் மா.கருண் அவர்களின் தலைமையில் குறித்த நேரத்தில் துவங்கியது.  பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி, அறங்காவலர்கள் முத்து. செல்வராஜா, தா. தேவதாஸ்,  ஆ. கந்தன்,                    த. தர்மராஜ்,  துணைத்தலைவர்கள் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ், சிவா சி. வெற்றிவேல், இணைச்செயலாளர் ச. கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆ. பிரமநாயகம், எஸ். சிவகுமார், ஆ. வி. கிப்சன், தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன், கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை ஒருங்கிணைப்பாளர் எ. நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. சேலம் மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் திருமதி  கு. லஷ்மி வரவேற்புரையாற்ற, மாவட்ட உறுப்பினர் அ. அண்ணாதுரை துவக்கவுரையாற்றி சேலம் மாவட்டக்கிளைக்கு   பெருமை சேர்க்கும் வகையில் வருகை புரிந்த பேரவை உறவுகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பேரவைத் தலைவர் தலைமையுரையாற்றி, தொலைதூரங்களில் இருந்த வந்திருந்த நண்பர்களின் பேரவை உணர்வை பாராட்டினார்.  தொடர்ந்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெள்ளிவிழா சங்கமம் குறித்து கருத்துரை வழங்கினர். கரூர் மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் முனைவர் இரா. திருமூர்த்தி, திருச்சி மாவட்ட  அமைப்பாளர் பா. மனோகரன், கோவை மாவட்ட அமைப்பாளர் வெ. ராஜா, கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் மா. மோகன், சென்னை மாவட்ட அமைப்பாளர் ரெ. சுரேஷ், சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் கோ. பலராமன் ஆகியோர் வெள்ளிவிழா நட்புச் சங்கமம் சிறப்பாக நடைபெறவும், சிறப்பு மலருக்கு விளம்பரங்கள் பெற்றுத் தரவும் முழுமையாய் ஒத்துழைப்பு அளிக்க உறுதியளித்து உரையாற்றினர்.

சங்கம விழா அரங்கம் வந்து சேர எளிய வழி, விழா விவரங்கள், பங்கேற்பு கட்டணம் குறித்த  தகவல்கள் வேண்டினர். தொடர்ந்து பேரவைத்தலைவர் சங்கம விழா குறித்து தெளிவுரையாற்றினார். விழா நடைபெறும் ODOUR RESORT வந்தடைய , தென் தமிழக நண்பர்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் இறங்கி, மகாபலிபுரம் வரவேண்டும். அங்கிருந்து 3 கி.மீ தூரம்தான். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் வரலாம்.  சிறப்பு அழைப்பாளர்களாக கடந்த 24 சங்கம விழாக்களிலும் கலந்து சிறம்பு மலரை வெளியிட்டும், பெற்றும்  வாழ்த்துரை வழங்கிய சான்றோர் பெருமக்களை அழைக்க வேண்டும். இரு நாட்களும் முழுமையான உணவு வசதியுடன், சனிக்கிழமை இரவு தங்கும் வசதியும் உண்டு. ஞாயிறு முழுமையாய் மகிழ்ச்சியுடன் களிக்க நீச்சல்குளம்,  உள்ளரங்கு விளையாட்டுகள், மைதான விளையாட்டுகள் எனவும் வசதிகள் உண்டு.

பங்கேற்பு கட்டணம் ஒருவருக்கு ₹ 2500/_. ஆனால் நண்பர்களின் பொருளாதார நிலை* *உணர்ந்து ஒருவருக்கு ₹ 1000/_ வீதம் பேரவை பொறுப்பேற்க தீர்மானித்துள்ளது. எனவே நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கான [ மனைவி / கணவர், பிள்ளைகள் ] கட்டணம் ஒருவருக்கு ₹ 1500/_ மட்டுமே. மற்ற உறவினர்கள், பேரவை உறுப்பினரல்லாதோருக்கான கட்டணம் நபருக்கு ₹ 2500/_ ஆகும். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை.

சங்கம விழாவில் பங்கேற்கும் நண்பர்கள் மார்ச் 31ஆம் தியதிக்குள் தலைமைக்கு கட்டணத்தை அனுப்பி உறுதி செய்யவும். மாவட்ட அமைப்பாளர்கள்  முன்னெடுப்புடன் கவனிக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட  அனைவருமே சிறப்பு மலரில் கட்டண வாழ்த்துச்செய்தி பெற்று அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டியது மகிழ்வுக்குரியது.  அனைவரும் ஆர்வத்துடன் செயல்படக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பேரவை பெயர், இலச்சினை பொறித்த கயிற்றுடன் புகைப்பட அடையாள அட்டை வேண்டுவோர்  ₹ 120/_ முன்னதாகவே செலுத்திடக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

40 க்கும் அதிகமான நண்பர்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான ஆலோசனைக் கூட்டத்தில் அகவை முதிர்ந்த அறிஞர்கள் ,பேரவை நட்புகள் திருச்சி பி. கிருஷ்ணன், கரூர் ஆர். நாகேந்திர கிருஷ்ணன், சிவகங்கை சி. பாகிரத நாச்சியப்பன், புலவர் தியாகசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டது பெருஞ்சிறப்பு என பேரவைத்தலைவர் பாராட்டினார்.

வெள்ளி விழா சங்கம ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நண்பர்களை சிறப்புடன் வரவேற்று, உபசரித்ததுடன் அரங்க ஏற்பாடு, சிற்றுண்டி  என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்திருந்த நண்பர்கள் அ. அண்ணாதுரை,  வி. ஏ. சரவணன், எம். ராஜ்குமார்,                      கே. கணேஷ்குமார், எஸ். ராமச்சந்திரன், கே. பூபதிராஜா, பேரா. ப. சுதந்திரம் அனைவருக்கும்  பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருமண வரவேற்பு விழா பணிகள் இருந்த போதிலும் பேரவைக் கூட்டத்தில்  கலந்து வரவேற்புரை வழங்கிய மாவட்ப் பேரவைக்கிளை அமைப்பாளர் கு. லஷ்மி அவர்களின் பேரவை ஈடுபாடு போற்றுதலுக்குரியது. ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட  பேரவை உறவுகள்  நாமக்கல் ப. சசிகுமார், ஓசூர் க. ஆறுமுகசாமி, நாகர்கோவில் பி. ராஜு, ஓசூர் ஹெ. ரத்னராஜ், சிவகங்கை அரிமா எம். எஸ்.கே. முத்துப்பாண்டியன், சிவகங்கை நல. ஞானபண்டிதன் ஆகியோருக்கு வாழ்த்து பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை 7 மணிக்கு பேரவைக் குடும்ப திருமண வரவேற்பு  விழாவில்  நண்பர்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.

செய்தித்தொகுப்பு:

ஜெ. ஜாண் கென்னடி, பொதுச்செயலாளர் 18. 02. 2021