22ஆவது நட்புச் சங்கம மலர்- பெறுபவர் திரு. உ. சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் - நவம்பர் 2017
NOV. 2017 - அறிவியல் மையம். அடையாறு.
கட்டுமான தொழில், மாத இதழ் ஆசிரியர் திரு. சிந்து பாஸ்கர் [அறிமுகம் - ந. முத்துமணி] அழைத்துச் சென்றார். நண்பர்கள் முத்து. செல்வராஜா, ந. முத்துமணி உடனிருந்தனர்.
திரு. உ. சகாயம் அவர்கள் அன்புடன் வரவேற்று தேநீர் தந்து உபசரித்தார்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை துவக்கம், செயல்பாடுகள், உலகளாவிய கிளைகள் குறித்து தெரிவித்தபோது மிகவும் வியந்து வாழ்த்தினார். நட்புச் சங்கமங்கள் பற்றி மிகவும் மகிழ்ந்தார்.
22ஆவது நட்புச் சங்கம மலர் வழங்கினோம்.
மும்பையில் நமது பேரவை சார்பாக பொது கருத்தரங்கு நடத்த விழைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அழைத்தோம். வேறு தொடர் நிகழ்வுகள் இருப்பதை தெரிவித்து பின்னொரு நாளில் வருகிறேன் என்றார்.
மும்பை தமிழர்களைப் பற்றியும் அவர்களுக்கு 1975 களில் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக இருந்த வரதராஜ முதலியார் பற்றியும், இன்றைய தமிழர்களின் நிலை, வளர்ச்சி பற்றி ஆர்வமுடன் விசாரித்தார்.
நேர்மையான, மனிதநேயப் பண்பாளரை சந்தித்து மகிழ்ந்த திருப்தியில் விடைபெற்றோம்.
மா. கருண், தலைவர்
இந்தியப் பேனா நண்பர் பேரவை.