இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை நிர்வாகிகள்மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பேரவை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் மா.கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் திருமதி பா.மலர்விழி அனைவரையும் வரவேற்றார்.
கிளைகளின் செயல்பாடுகளில் புத்துணர்ச்சி அளிப்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. பல கிளைகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பொறுப்பாக செயல்பட்டு தலைமைக்கு அறிக்கை எதுவும் தராததற்கும்,கொரானா பொது முடக்கத்தைக் காரணம் காட்டி அமைப்பாளர்கள் சமாளிக்கும் நிலைக்கும் தலைமையின் உடன்பாடின்மை பதிவு செய்யப்பட்டது.
அனைத்து கிளைகளையும் கண்காணித்து, செயல்பாட்டில் தொய்வு நீக்கி, செயல்படும் திறனை மேம்படுத்தவும், கிளைகள் அமைப்பாளர்கள் அங்கீகாரத்திற்கு குறைந்தபட்ச தேவையான 12 உறுப்பினர்கள் தகுதி உறுதி செய்யவும், தலைமையின்பிரதிநிதிகளாகப் பொறுப்புடன் செயல்பட 5 பேர் கொண்ட கிளைகள் சீரமைப்புக் குழு (BEC -BRANCHES EVALUATION COMMITTEE) நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. BEC அளிக்கும் அறிக்கையின்படி கிளைகளின் அங்கீகாரம் தலைமையால் பரீசீலிக்கப்படும்.
மார்ச் 2023 வரையிலான உறுப்பினர் தகுதிக் கட்டணம் அனைவரும் செலுத்த வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டது. உறுப்பினர் தகுதியை முழுமையாய் உறுதி செய்துள்ள கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்ட நண்பர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் பதிவு செய்யப்பட்டது.
12.10.2020 முதல் 11.11.2020 வரையிலான ஒருமாதம் புதிய நண்பர்கள் அறிமுக மாதம்【 IPL- NEW FRIENDS ENROLLMENT MONTH 】 என அறிவிக்கப்பட்டு, பேரவைக்கு புதிய நண்பர்களை அறிமுகப்படுத்துவதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கால கட்டத்தில் அதிகமான புதிய நண்பர்களை பேரவையில் இணைக்கும் நண்பர்களுக்கு வெள்ளிவிழா சங்கம மேடையில் தனிச்சிறப்பு செய்யப்படும்
நீண்ட நாட்களாகப் பேரவைக்கு புதிய நண்பர்களை அறிமுகப்படுத்துவதில் தொய்வாக உள்ள அயலக அமைப்பாளர்கள் Paris BARTHASARADY, UAE T. SENTHILKUMAR, Russia S. SEKAR, Australia O. PALANICHAMY, Kuwait N. THIYAGARAJAN, Malaysia R. ARASENTHIRAN, Germany M. SIVARAM, UK P. PREMRAJ அனைவரும் பேரவை ஈடுபாட்டுடன் புதிய நண்பர்களை அறிமுகப்படுத்தி தங்கள் நாட்டில் பேரவைக்கிளை வலுவாகக் காலூன்ற வகைசெய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டது. புலனக் குழுக்களில்[WhattsApp] பதிவுகள் இட்டு பேரவை நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகமாகி பேரவை நட்புக்கு பெருமை சேர்க்க அயலக அமைப்பாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பேரவைக் குடும்பம் என்பது வார்த்தையாக இல்லாமல் நட்புணர்வுடன் குடும்பமாக இணைந்திருக்கிறோம் என்பதை உணர்த்த ஒன்றுபடுவோம் என கேட்டுக்கொள்ளப்பட்டது
16.10.2020 வெள்ளிக்கிழமை பொதுச்செயலாளர் புதுமனை புகுவிழா (கடகுளம், திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டம்) வில் நண்பர்கள் கலந்து சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
பொருளாளர் கோ. செல்லத்தம்பி நன்றியுரையாற்ற, தேனீர் விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர்ந்து கலந்து கொண்டனர்.
ஜெ.ஜாண் கென்னடி
பொதுச்செயலாளர்
12.10.2020