இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 ஆவது ஆண்டு துவக்கவிழா [ 12 மார்ச் ] சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மாலை 7 மணிக்கு மும்பை, மான்கூர்டு மனநலம் குன்றியோர் காப்பகத்தில் உள்ள 300 பேருக்கு பேரவை சார்பாக உணவு வழங்கப்பட்டது.
பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரவைப் பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி, அறங்காவலர் த. தர்மராஜ், பொருளாளர் கோ. செல்லத்தம்பி, இணைச்செயலாளர் சிவா சி. வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் சு. பாஸ்கர், பேரவை நண்பர்கள் ந. முத்துகுமார், மு. ராஜசேகர், திருமதி பா. மலர்விழி மற்றும் பேரவை ஆர்வலர்கள் வெ. மகாராஜன், சி. சிவசக்திவேல், இரா. இராமசுப்ரமணியன், வி.கே. சரவணகுமார், ம. அந்தோணிராஜ், எம்.ஜே. மைக்கேல் ஜாக்சன், பிரகாஷ், கலினா ராஜு, திருமதி சுலபா கருண், திருமதி சரோலின் கென்னடி, திருமதி எஸ்தர் செல்லதம்பி, திருமதி சுகன்யா சாய் மகேஷ்வரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா, பேரவை நிறுவனர்-தலைவர் மா. கருண் பிறந்தநாள் விழா ஆகியன பாண்டூப் பிரைட் உயர்நிலை பள்ளி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பம்பாய் திருவள்ளுவர் மன்ற செயலாளர் கல்வி தந்தை வி. தேவதாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பேரவைப் புரவலர்கள் ம. ஸ்டான்லி மணிவண்ணன், ம. மரிய செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழர் நலக் கூட்டமைப்பு மகாராஷ்டிரா தலைவர், சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் இரா. தமிழ்ச்செல்வன் விழாப் பேருரையாற்றினார். அவரது உரையின் போது இந்தியப் பேனாநண்பர் பேரவை மற்றும் பேரவைத் தலைவர் மா. கருணின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டியதுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா, கோவா, அஸ்ஸாம், மேகாலயா புதுடில்லி போன்ற மாநிலங்களிலும். வெளிநாடுகளிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து நட்புப் பாலம் அமைத்திருப்பதை சுட்டிக்காட்டியதுடன், சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்து சான்றோர்களும் நல்ல நண்பர்களாக அமர்ந்திருக்கும் களம் இந்த விழா என புகழாரம் சூட்டினார்.
விழாவில் ஆதிதிராவிட மகாஜன சங்கத் தலைவர் கே. வி. அசோக்குமார், தருண் பாரத் சேவா சங்கத் தலைவர் ச. இராஜேந்திரன் சுவாமி, மும்பை பா.ஜ.க செயலாளர் கராத்தே இரா. முருகன், தி.மு.க பேச்சாளர் முகமது அலி ஜின்னா, இலெமூரியா அறக்கட்டளை தலைவர் சு. குமணராசன், மும்பை யாதவ மகாசபை தலைவர் ஈ. லட்சுமணன், காமராஜர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி பொருளாளர் வி. மைக்கிள் ஜார்ஜ், மும்பை புறநகர் தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், பம்பாய்த் தமிழ்ச் சங்க செயலாளர் கு. ஆறுமுகப்பெருமாள், பம்பாய் திருவள்ளுவர் மன்ற தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், மராத்திய மாநில தமிழ்ச் சஙக பொதுச்செயலாளர் ஜெ. இராஜா இளங்கோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் மகாராஷ்டிரா தலைவர் வதிலை பிரதாபன், தமிழர் பாசறை செம்பூர் தலைவர் ஆ. பி. சுரேஷ், மராத்திய மாநில சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் டி.எம். ரெம்ஜிஸ் , பாண்டுப் தி.மு.க.செயலாளர் கு. மாரியப்பன், அந்தேரி தமிழ்ச் சங்கத் தலைவர் வெ. குமார், மும்பை மாநகராட்சி தமிழாசிரியர் குழுமத் தலைவர் திருமதி அனிதா டேவிட். செம்பூர் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் வெ. மகாராஜன், தொழிலதிபர்கள் இரா. இராமசுப்பிரமணியன்,என்.சுயம்பு, ஆர். வடிவேல், எம்.ஜே. ஜாக்சன், சி. சிவசக்திவேல்,அ. ஜாண்சன், கா. பொன்ராஜ், சி. மலைஅரசன், ப. முருகேஷ், அ. பாண்டி* மற்றும் ஏராளமானோர் விழாவில் கலந்து இந்தியப் பேனாநண்பர் பேரவையின் சமூகப் பணிகளை பாராட்டினர்.
பேரவை பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி விழாவை சிறப்பாக நெறியாள்கை செய்தார்.
நிறைவாக ஏற்புரையாற்றிய பேரவைத் தலைவர் மா. கருண் பேரவையின் செயல்பாடுகள் அனைத்தும் பேரவை நண்பர்களின் கூட்டு முயற்சி என்றும் பேரவைக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.
பேரவை அறங்காவலர் த. தர்மராஜ், துணைத்தலைவர் பா. சதீஸ்குமார், இணைச்செயலாளர் சிவா சி. வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர சு. பாஸ்கர், பேரவை நண்பர்கள் எல். பாஸ்கரன், கவிராஜ், செந்தூர். நாகராஜன், ந. முத்துகுமார், ஆர். பாலன், மு. ராஜசேகர், கே. நேதாஜி போஸ், கே. ராஜா, திருமதி. மாலதி பிரகாஷ், திருமதி. ப. கோமதி, திருமதி. எல். சக்தி சித்ரா, திருமதி. பா. மலர்விழி, சி. ஸ்டீபன், எஸ். இராமச்சந்திரன்,தமிழ்மணி பாலா, டி கருப்பசாமி, எம்.பி. மாதப்பன், கே. ரவி ஆகியோர் இணைந்து விழா ஏற்பாடுகளை வெகுசிறப்பாகச் செய்திருந்தனர்.
பேரவைப் பொருளாளர் கோ. செல்லத்தம்பி நன்றியுரையாற்ற அறுசுவை விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.