அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
பேரவை மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2020
  • மும்பை

இந்தியப் பேனாநண்பர் பேரவை  மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை  உறுப்பினர்கள் சந்திப்பு 19.02.2020  புதன்கிழமை  மாலை  6.00 மணிக்கு செம்பூர் ஸ்டார்வியூ மாடி வளாகத்தில்  பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில்  நடைபெறற்றது. 

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கொழும்பு மாநகராட்சி மன்ற உறுப்பினர்  திரு. பாஸ்கரா சின்னத்தம்பி அவர்கள் கலந்து கொண்டார்.  இலங்கையில் பேரவைக்கிளை அறிமுகவிழா நடத்துவது பற்றிய கலந்துரையாடல்  நடைபெற்றது.  திரு. பாஸ்கரா அவர்கள் அறிமுகவிழாவுக்கான ஏற்பாடுகளை தாமே முன்னின்று நடத்துவதாக உறுதியளித்தார். ஜுலை மாதம் இலங்கைப் பயணத்திற்கு பேரவை நண்பர்கள்  தயாராகுங்கள் எனக் கேட்டுக்கொண்டதுடன் பேரவையின் 25 ஆண்டு சாதனைச் சரித்திரத்தையும் புகழ்ந்து உரையாற்றினார்.

திரு. பாஸ்கரா அவர்களின் புதல்வி குமாரி கேதாரணி பாஸ்கரா தீட்டிய கண்கவர் வண்ண ஓவியங்களின் கண்காட்சியை பேரவை நண்பர்கள் கண்டு களித்துப் பாராட்டினர்.  செயற்குழு உறுப்பினர் திருமதி பா. மலர்விழி கேதாரணிக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். 

17.01.2020 - சென்னையில் நடைபெற்ற  வெள்ளிவிழா சங்கம ஆலோசனைக் கூட்டம், பேரவைக்கான அலுவலகம் வாங்கும் முயற்சிகளில் நண்பர்கள் ஒத்துழைப்பு, சிறப்பு மலர்- 2020 தயாரிப்புப்  பணிகள், சதுரங்கத் திருவிழா 2020 (29  பெப்ரவரி 2020 கீழப்பாவூர், தென்காசி மாவட்டம் ) பற்றியும் விவாதிக்கப்பட்டு கருத்துகள் பரிமாறப்பட்டன. 

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில்  செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருமதி. பா. மலர்விழி அவர்களுக்கு திருமதி சுலபா கருண் அவர்கள் பயனாடை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தார். 

 

ஜெ.ஜாண் கென்னடி, 

பொதுச்செயலாளர் -  இந்தியப் பேனாநண்பர் பேரவை,