இன்று {21.06. 2020} மாலை 4 மணிக்கு பேரவை அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் இணையவழியில் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்:
ஜெ. ஜாண் கென்னடி
முத்து செல்வராஜா
த. தர்மராஜ்
எம்.எஸ். ராஜன்மார்ட்டின்
கோ. செல்லத்தம்பி
பா. சதீஷ்குமார்
சி.சிவ. பிரேம்பிரகாஷ்
சிவா சி. வெற்றிவேல்
ச. கண்ணன்
ந. முத்துமணி
ஆ. பிரமநாயகம்
வே. சிதம்பரம்
எஸ். சிவகுமார்
ஆ. வி. கிப்சன்
டி. தணிகாசலம்
திருமதி பா. மலர்விழி
பேரவை நிர்வாகச் சீர்திருத்தங்கள், மாவட்டக் கிளைகள் சீரமைப்பு, கொரோனா காலத்தில் செயல்பாடுகள், அனைத்து உறுப்பினர்களும் மூன்று ஆண்டுகள் [31 மார்ச் 2023 வரை] உறுப்பினர் தகுதி உறுதி செய்தல், வாட்ஸ்அப் பேரவைத் தளத்திலும் [ IPL FAMILY ], மாவட்டத் தளத்திலும் அனைத்து நண்பர்களும் இணைந்திருத்தல் என்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
பொது முடக்கத்தின் தாக்கம் உணர்ந்து சமூகப் பணியாற்றிய மும்பை, நாமக்கல், கரூர், கோவை, , கர்நாடகா நண்பர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் முன்மொழிந்த, மாவட்டக்கிளைகளில் நண்பர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகளை சீரமைக்க நிர்வாகக்குழுவின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட விவாதத்திற்குப் பின் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தலைவர் ஒப்புதலுடன் தீர்மானமாகப் பதிவு செய்யப்பட்டது.
அதன்படி,
தென்காசி - பா.சதீஷ்குமார்
விருதுநகர் - கோ. செல்லத்தம்பி
சிவகங்கை - சி.சிவ. பிரேம்பிரகாஷ்
புதுக்கோட்டை - முத்து செல்வராஜா
கரூர் - த. தர்மராஜ்
சேலம் - ஆ. பிரமநாயகம்
ராணிப்பேட்டை - எஸ். சிவகுமார்
திருப்பூர் - சிவா சி. வெற்றிவேல்
கேரளா - ந. முத்துமணி
மகளிர் அணி - திருமதி பா. மலர்விழி
ஈரோடு மாவட்டத்தில் பேரவைக்கிளை உருவாக்கும் பொறுப்பு - வே. சிதம்பரம்
குமரி, திருச்சி, சென்னை, காஞ்சி-செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவா, புதுடில்லி, அஸ்ஸாம் கிளைகள் திருப்திகரமாக செயல்படுவது குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டினர்.
சர்வதேச பேரவை அமைப்பாளர்களுடன் தொடர்பில் இருந்து பேரவை வளர்ச்சியை முன்னெடுக்க பேரவைத் தலைவர் மா. கருண் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பொருளாளர் கோ. செல்லத்தம்பி நன்றியுரையாற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
ஜெ.ஜாண் கென்னடி,
பொதுச் செயலாளர், இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை
21. 06. 2020