அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
பேரவை நண்பர் பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்து - ஜூலை 2020
  • கிருஷ்ணகிரி

29.07.2020

‌இன்று மாலை நண்பர் திரு. மனுநீதிச்சோழன் அவர்களின் வீட்டிற்கு சென்று, அவருக்கு நம் பேரவை சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து, சிறிய நினைவு பரிசை அவருடைய பிள்ளைகளோடு இணைந்து வழங்கினோம்.

அவரும்,அவருடைய துணைவியாரும்,பிள்ளைகளும் மிகவும் அன்பாக வரவேற்று, இனிப்புகளை கொடுத்து, நம்மை சிறப்பாக உபசரித்தார். அவர்களின் அன்புக்கும்,நட்புக்கும் நன்றிகள்.

மேலும்,அவருடன் நம் பேரவையின் சிறப்பான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டோம்.

அவருடைய பிறந்த நாளில், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததில் பெருமகிழ்ச்சி,

மேலும் இதைப் போன்ற சிறப்பான நாட்களை கொண்டாடும் நண்பரை பற்றிய ஒரு சிறிய அறிமுகம் செய்வது, புதிதாக இணைந்திருக்கும் நண்பர்களுக்கு நண்பர்களை பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அந்த வகையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம் நண்பர் திரு. மனுநீதிச்சோழன் தமிழில் மிகுந்த ஆர்வமும்,நம்  பேரவையில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். அன்பு, நட்பு, மனிதநேயம் போன்ற சிந்தனைகளில் அதிக பயணம் செய்பவர்.

ஓசூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் இவருக்கு யஷ்வந்த் ராஜ் மற்றும் ஜெயவர்ஷினி என்று இரு செல்லப் பிள்ளைகள்.

இவர் வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ந்து, மிகவும் சிறப்பான நிலையை அடைய நம் இந்தியப் பேனா நண்பர் சார்பாக இதயப்பூர்வான வாழ்த்துக்கள்.


நன்றி...அன்புடன்,

உங்கள் நண்பன்,

நந்தகுமார்.எ

ஒருங்கிணைப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம்.