அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை - 4ஆவது ஆண்டு துவக்கவிழா - பிப்ரவரி 2021
  • புதுடில்லி
  • புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை - 4ஆவது  ஆண்டு துவக்கவிழா
  • 28.02.2021. காலை 11.15 மணி
  • ஸ்டார் பேலஸ். கரோல்பாக்
  • தலைமை :  திரு. மா. கருண் அவர்கள்

புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் அனைவரையும் வரவேற்றார்.

நண்பர்கள் சுயஅறிமுகம் செய்து கொண்டபின் கலந்துரையாடல் துவங்கியது.

பேரவை நண்பர்கள் பி. சாய்நாதன்,  பி. சந்தோஷ்குமார், டி. நாகராஜன், பி. சங்கர், பி. முத்து ரமேஷ் ஆகியோர் பேரவை நட்பு  அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

புதிய நண்பர்கள்

Mr. P. RAMAMOORTHY

Mrs. USHA VENKAT

Mr.V. MURUGESAN

Mr. K. NAGENDRAN

Mr.S. RAJU.

ஆகியோர் பேரவைக் குடும்ப உறுப்பினர்களாக நண்பர் டி. நாகராஜன், பி. சந்தோஷ்குமார் அறிமுகத்தில் இணைந்தனர்.

இந்தியப் பேனாநண்பர் பேரவையின் துவக்கம், வளர்ச்சி, 26 ஆண்டுகால செயல்பாடுகள், 25.02.2018 ல்  நடைபெற்ற புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை துவக்கவிழா குறித்து பேரவைத்தலைவர் விளக்கவுரையாற்றினார். புதிய நண்பர்கள் பேரவையின் கருப் பொருட்களான அன்பு, நட்பு, மனிதநேயம் தழைக்க ஒத்துழைப்பு அளித்து இணைந்திருப்போம் என கருத்துரைத்தனர்.

வெள்ளிவிழா நட்புச் சங்கமம், சிறப்பு மலர் குறித்தும் விரிவாக விவாதித்து ஒத்துழைப்பு அளிக்க உறுதி அளித்தனர். நண்பர் டி. நாகராஜன் சிறப்பு மலர் விளம்பரங்கள் அதிகம் பெற்று அளிக்க விண்ணப்பங்ள் பெற்றுக்கொண்டார்.

நண்பர் கு. நாகேந்திரன் நன்றியுரையாற்ற, சிறப்பான மதிய விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

இப்டிக்கு,

ஆ. பிரமநாயகம்,  அமைப்பாளர், புதுடில்லி மாநிலப் பேரவைகிளை.

நாள்: 28. 02. 2021