பேரியக்கத்தின் பெருமைமிகு நண்பர்களே !
வணக்கம்.
நேற்று நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பில் 【ZOOM MEETING】 கலந்து சிறப்பித்த நிர்வாகிகள், அமைப்பாளர்கள் அனைவருக்கும் அறங்காவலர் குழு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெள்ளிவிழா நட்புச் சங்கமம், தொற்றுத்தடைகள் நீங்கியபின் ஆகஸ்ட்டு அல்லது செப்டம்பர் 2021ல் அதே இடத்தில் சிறப்புடன் நிகழும் என்பதை இலக்காகக் கொண்டு அனைவரும் நம்பிக்கையுடன் பேரவைப் பணிகளைத் தொடர்வோம்.
நண்பர்கள் அனைவரும் தங்கள் படைப்புகளையும், பேரவைக்கிளை நிகழ்வுப் பதிவுகளையும், விளம்பரங்களையும் தலைமைக்கு உடனடியாக அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
பேரவைத்தலைவர் அவர்களின் முக்கியமான எதிர்பார்ப்பு அனைத்து நண்பர்களும் தலைமையுடனும், பேரவை நண்பர்களுக்குள்ளும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதுதான்.
இன்றைய சூழலில் அதற்கான ஒரே வாய்ப்பு பகிரித்தளம்தான் [ WhattsApp ]. இதனை அனைவரும் மனதில் கொண்டு பேரவைத் தளங்களில் இணைந்திருந்து நம் பேரவைக்குச் சிறப்பு சேர்ப்போம். நட்பு வளர்த்து நலமோடு வாழ்வோம் !
மு.செல்வராஜா, அறங்காவலர் குழு
26. 04. 2021
************************************************************************************************************************
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
தலைமை நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் மெய்நிகர் சந்திப்பு (Zoom Meeting) இன்று 25-04-2021【ஞாயிற்றுக்கிழமை】 மாலை 4.00மணி முதல் 6.30 மணி வரை பேரவைத்தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பேரவைத் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி துவக்க உரையாற்றினார்.
பெரும்பான்மையான நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் [ 25 பேர் ] இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவுகின்ற காரணத்தால், பேரவை நண்பர்கள், குடும்பதினர் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
பேரவை நண்பர்களை ஒருங்கிணைத்து அமைப்பு ரீதியாக செயல்பட வேண்டியது அமைப்பாளர்கள் கடமை என்பதும், நிர்வாக ரீதியாக அமைப்பாளர்கள் / நண்பர்களுடன் இணைப்பில் இருக்க வேண்டியது நிர்வாகக் குழுவினரின் கடமை என்பதும் வலியுறுத்தப்பட்டது.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பின் சிறப்பை உள்வாங்கி, உணர்ந்து செயலாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில், வெள்ளிவிழா சங்கமம் இன்னமும் உறுதிப்படுத்த இயலாத சூழ்நிலையில் உள்ளது. எனினும் சிறிது தாமதமானாலும் சூழ்நிலைகள் சாதகமானவுடன் சங்கமம் சிறப்புடன் நடைபெறும். சிறப்புமலர் தயாரிப்பில் தொய்வு இல்லை. அமைப்பாளர்கள் அனைவரும் சங்கம மலருக்குத் தேவையான தங்கள் கிளைச் செய்திகளையும், விளம்பரங்களையும் உடனடியாக iplsouvenir2021@yahoo.com என்ற மின்னஞ்சலில் அனுப்ப வலியுறுத்தப்பட்டது.
நிர்வாகிகள் , அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் தொடர்பில் இருந்து பேரவைக் குடும்ப உறவுக்கு வலு சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் இதய நல்வாழ்த்துகள் !
{தலைவர் ஒப்புதலுடன்}
எ. நந்தகுமார்
25. 04.2021