தேனமுதத்தமிழ் மக்கள் நல அறக்கட்டளை, தில்லி கலை இலக்கியப் பேரவை, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, ORANGE WORLD RECORDS ஆகிய அமைப்புகள் இணையவழியில்* *இணைந்து வழங்கிய "முத்தமிழ்க் கலை விழா" 720 மணி நேர உலக சாதனை நிகழ்ச்சியில் இந்தியப் பேனாநண்பர் பேரவை நண்பர்கள் பங்கேற்ற கவியரங்கம் 24.06.2021 வியாழக்கிழமை, மாலை 2 மணி முதல் 4 மணிவரை நடைபெற்றது.
தலைப்பு :
அன்பு - நட்பு - மனிதநேயம்
சர்வதேச அளவில் நடைபெற்ற உலக சாதனைக் கவியரங்கத்தை பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் ஒருங்கிணைத்து நெறியாள்கை செய்தார்.
பாவலர் கருமலைதமிழாழன் அவர்கள் கவியரங்கிற்கு தலைமை ஏற்று திறம்பட நடத்தினார்.
பேரவையின் பஹ்ரைன் கிளை அமைப்பாளர், சொல்வேந்தர் பொன் சங்கர பாண்டியன் அவர்கள் அழகு தமிழில் அன்பு மலர்கள் தூவி அனைவரையும் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி, துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் இருவரும் கவி நயத்துடன் வாழ்த்துரை வழங்கி கவிஞர்களை உற்சாகப்படுத்தினர்.
தலைமைக் கவிஞர் பாவலர் கருமலைதமிழாழன் அவர்கள் அருமையான தலைமைக் கவிதை வழங்கி கவிஞர்களை கவிதைகள் படைக்க அழைத்தார்.
பன்முக சாதனையாளர்களும், கவிநயம் மிக்க பல்துறை வித்தகர்களுமான பேரவைக் கவிஞர்கள்
புலவர். தியாகசாந்தன். திருச்சி
திரு. கடவூர் மணிமாறன். கரூர்
கவிஞர். புதுகை புதல்வன். புதுக்கோட்டை
மருத்துவர். இரா. திருமூர்த்தி. கரூர்
கவிஞர். இராம. சந்தோஷம். சிதம்பரம்
கவிஞர். வினோத் பரமானந்தன். ராஜஸ்தான்
திருமதி. என். மீனாட்சி. கிருஷ்ணகிரி
தமிழ்ச்செம்மல் மா. முருககுமரன். ஓசூர்
தமிழ்ச்செம்மல் அ.க. இராசு. ஓசூர்
கவிஞர். ஆர். நாகேந்திர கிருஷ்ணன். கரூர்
கவிஞர். மா. சுகுமார். கல்பாக்கம்
கவிஞர். ஞானசி. சென்னை
கவிஞர். கோவிந்தராஜன் பாலு. கும்பகோணம்
முனைவர் எம். பி. சரவணன். ஓசூர்
ஆகியோர் அன்பு - நட்பு - மனிதநேயம் என்ற தலைப்புக்கேற்ப அருந்தமிழில் கருத்துக் கருவூலமாக கவிதைகள் படைத்து சுவைஞர்களின் சிந்தையில் உறவாடிச் சிறப்பித்தனர்.
பேரவையின் புதுடில்லி மாநிலக்கிளை அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் அவர்கள் நன்றியுரையாற்றி நிகழ்வை நிறைவு செய்தார். இந்த சிறப்பான சாதனைக் கவியரங்கத்தை முழுமையாக இந்தியப் பேனாநண்பர் பேரவை நடத்தும் வாய்ப்பை அளித்த டில்லி கலை இலக்கியப் பேரவை பொதுச்செயலாளர் பா. குமார் அவர்களுக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பேரவைக் குடும்ப நண்பர்களுடன், சர்வதேச அளவிலான தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் நிகழ்வை கண்டும், கேட்டும் ரசித்தனர்.
மா.கருண். தலைவர், இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை.
25. 06. 2021