அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
மும்பை நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் சந்திப்பு - ஆகஸ்ட் 2021
  • மும்பை

08.08.2021 மாலை 5 மணிக்கு பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மும்பை நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள்  சந்திப்பு நிகழ்வில்..................

1. பேரவை நண்பர்களின் பேரவை ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  குறிப்பாக இன்றைய காலத்தில் ஒரே தொடர்பு சாதனமாக விளங்கும் வாட்ஸ்அப் தளங்களில் தொடர்புடன் இருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. தளங்களில் தொடர்ந்து பதிலளித்து  இணைந்திருக்க விரும்பாதவர்களை பேரவையின் மதிப்புறு நண்பர்களாக ஏற்றுக்கொள்ள இயலாது என்பது வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து பேரவை சார்ந்து தொடர்பில் இருப்பது மட்டுமே பேரவை உறுப்பினர் என்ற தகுதிக்கு  முக்கியமானதாகக் கருதப்படும் எனத் தீர்மானாக்கப்பட்டது.

2. வெள்ளிவிழா நட்புச் சங்கமம்  அரசு அறிவிப்பு வெளியானதும்,  அறிவிக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு  நடத்தப்படும். சிறப்பு மலர் பணிகள்  துவங்கி விட்டது.  அனைத்து அமைப்பாளர்களும் தங்கள் மாவட்டச் செய்திகளைத் தொகுத்து, புகைப்படங்களுடன் தபாலில் அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

3. மண்டலங்களாக கிளைகள் ஒருங்கிணைக்கப்பட்டது குறித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களும்  குறைந்த பட்சமாக 12 உறுப்பினர்களுடன் தனிச் சிறப்பு பெற்று இயங்க,  மண்டல அமைப்பாளர்கள்  பொறுப்புடன் செயல்படக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தலைவர் அனுமதியுடன்.................

குறுகிய காலத்தில் அதிகமான  நண்பர்களுக்கு நம் பேரவையை அறிமுகப்படுத்தி அவர்களை பேரவைக் குடும்ப உறுப்பினர்களாக இணைத்த சிவகங்கை மண்டல அமைப்பாளர் அரிமா எம். எஸ். கே. முத்துப்பாண்டியன் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. 

நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கும் நண்பர்கள் இன்னும் அதிகமான ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட டது.

பொருளாளர் கோ. செல்லத்தம்பி நன்றியுரையாற்ற, தேநீர் விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஜெ. ஜாண் கென்னடி, பொதுச்செயலாளர்

09.08.2021