இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
சென்னை மாவட்டப் பேரவைக்கிளை.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு 14.08.2021. சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் பேரவை உறுப்பினர் திரு. ஞானசி அவர்கள் இல்லத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
அமைப்பாளர் ரெ. சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.
இச்சந்திப்பில் வெள்ளிவிழா நிகழ்வுக்கு தயாராவது குறித்தும், சென்னை மாவட்டப் பேரவை நண்பர்களிடம் பேரவை சார்ந்த நட்பு நெருக்கத்தை அதிகரிப்பது குறித்தும், கொரனா காரணமாக தனிமையில் இருப்பது போன்ற உணர்வில் இருந்து விடுபட அனைத்து நண்பர்களிடத்திலும் தொடர்பில் இருத்தல் அவசியம் தேவை என்ற கருத்தும் விவாதிக்கப்பட்டது.* *உறுப்பினர் கட்டண நிலுவை, வெள்ளிவிழா சிறப்புமலர் விளம்பர கட்டணம் தலைமைக்கு அனுப்பிட வேண்டுகோளும் பகிரப்பட்டது.
வரும் 09.09.2021 வியாழன் காலை 7.30 மணிக்கு காஞ்சியில், நமது பேரவைத் தலைவர் முன்னிலையில் நடைபெறவிருக்கும் பேரவைத் தலைமை செயற்குழு உறுப்பினர் து. தணிகாசலம் அவர்கள் இல்ல மணவிழாவில் சென்னை மாவட்டப் பேரவை நண்பர்கள் திரளாகப் பங்கேற்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
நண்பர் ஞானசி அவர்கள் இனிப்பு வகைகள், தேநீர் கொடுத்து அன்போடும், மகிழ்வோடும் உபசரித்ததுடன், பேரவைத் தலைவர் சென்னை வரும் போதெல்லாம் தனது அலுவலக வளாகத்தில் அனைத்து நண்பர்களும் பங்கேற்கும் வகையில் சந்திப்பு நிகழ்வு நடத்த வேண்டுமென வேண்டுக்கோள் விடுத்து நன்றி உரை ஆற்றினார்.
சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள்:
1) M. முத்து செல்வராஜா
2) M.செல்வசதிஷ்
3) R. சுரேஷ்
4) T. சாமுவேல் ராஜ்
5)M. இளவேனில் பாரதி
6) G. முத்துச்சாமி
7) N. சுதன் வசந்த் மெர்ஸின்
அன்புடன்
ரெ.சுரேஷ், அமைப்பாளர்.