இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
பேரியக்கத்தின் பெருமைமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும்:இதய வணக்கம்.
1. சீர்மிகு செயல்பாடுகள்.
2. நேர்மிகு நிர்வாகச் சிறப்பு.
3. உறுப்பின நண்பர்கள் தொடர்ந்து இணைப்பில் இருந்து " பேரவைக் குடும்பம் " என்ற உன்னத உறவுடன் வளமான வருங்காலம் என்ற சிந்தனைகளின் வெளிப்பாடாக நமது பேரவைக் கிளைகள் நிர்வாகத்தில் சில சீர்திருத்தங்களை நிர்வாகக்குழு பரிந்துரையுடனும், பேரவைத் தலைவரின் ஒப்புதலுடனும் பேரவை நண்பர்களின் கவனத்திற்கு வைக்கிறேன்.
"பேரவைக்கிளை" என்ற அங்கீகாரம் பெற குறைந்த பட்சமாக 12 நண்பர்கள் வேண்டும் என்பது உறுதியாக நடைமுறைப் படுத்தப்படும்.*
பேரவைக்கிளை தகுதி பெறாத மாவட்டங்களின் நண்பர்கள் அருகில் உள்ள தகுதி பெற்ற மாவட்டத்துடன் இணைந்து, மண்டலத் தகுதி பெற்றுள்ள அந்த அமைப்பாளரின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும்.
அதன்படி
திருச்சி மண்டலம் :
அமைப்பாளர் : பா. மனோகரன்.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், மாவட்டப் பேரவை நண்பர்கள் திருச்சி மண்டல அமைப்பாளர் பா. மனோகரன் அவர்களுடன் தொடர்பில் இருந்து, அவரது கட்டமைப்பில் இயங்க வேண்டும்.
கோவை மண்டலம் :
அமைப்பாளர் : வெ.ராஜா.
கோவை, திருப்பூர், ஈரோடு , நீலகிரி மாவட்டப் பேரவை நண்பர்கள் கோவை மண்டல அமைப்பாளர் வெ. ராஜா அவர்களுடன் தொடர்பில் இருந்து, அவரது கட்டமைப்பில் இயங்க வேண்டும்.
காஞ்சி மண்டலம் :
அமைப்பாளர் : க.ஹரி.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டப் பேரவை நண்பர்கள் காஞ்சி மண்டல அமைப்பாளர் க. ஹரி அவர்களுடன் தொடர்பில் இருந்து, அவரது கட்டமைப்பில் இயங்க வேண்டும்.
சிவகங்கை மண்டலம் :
அமைப்பாளர் : எம்.எஸ். கே. முத்துப்பாண்டியன்.
சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டப் பேரவை நண்பர்கள் சிவகங்கை மண்டல அமைப்பாளர் எம். எஸ். கே. முத்துப்பாண்டியன் அவர்களுடன் தொடர்பில் இருந்து, அவரது கட்டமைப்பில் இயங்க வேண்டும்.
குமரி மண்டலம் :
அமைப்பாளர் : தா. தேவதாஸ்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டப் பேரவை நண்பர்கள் குமரி மண்டல அமைப்பாளர் தா. தேவதாஸ் அவர்களிடம் தொடர்பில் இருந்து, அவரது கட்டமைப்பில் இயங்க வேண்டும்.
அனைத்து மண்டலங்களும் பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள் மேற்பார்வையில், தலைவர் கண்காணிப்பில் செயல்படும்.
சென்னை, சேலம், கரூர், திருவாரூர், இராணிப்பேட்டை நாமக்கல், விருதுநகர், மும்பை, கேரளா, கோவா, புதுடில்லி, அஸ்ஸாம் கிளைகள் 12 உறுப்பினர்களுக்கும் அதிகமாகக் கொண்டு, தனித்தன்மையுடன், பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள் மேற்பார்வையில், தலைவர் கண்காணிப்பில் செயல்படும்.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வசிக்கும் மாவட்டம் / மாநிலம் கண்டிப்பாக பேரவைக்கிளை அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். கிளை அங்கீகாரம் இல்லாத இடங்களில் இருக்கும் தலைமை நிர்வாகிகள் { கர்நாடகா, அஸ்ஸாம், தென்காசி, } ஆகஸ்ட் 31ஆம் தியதிக்குள் தமது மாவட்டம் / மாநிலத்தை கிளை அங்கீகாரத்திற்கு தகுதிக்குரியதாக்கி அமைப்பாளர் பரிந்துரை செய்து அங்கீகாரம் பெற வேண்டும்.
பேரவை சார்ந்த பகிரித் தளங்கள் [WhatsApp groups] பேரவை சார்ந்து இயங்க வேண்டும். சில மாவட்டத் தளங்கள் கட்டுப்பாடின்றி பொதுமேடைகளாக பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
பேரவையின் வெள்ளிவிழா நட்புச் சங்கமம் தாமதமானாலும், மிகச் சிறப்புடனும், அதிகப்படியான நண்பர்கள் பங்கேற்புடனும் நடத்திட தலைமை தயாராகிக் கொண்டிருக்கிறது. அமைப்பாளர்களின் ஒத்துழைப்பு அதிகமானால் சிறப்பும் அதிகமாகும்.
சிறப்புமலர் தயாரிப்பு துவங்கி விட்டது. தலைமையின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
ஜெ. ஜாண் கென்னடி
பொதுச்செயலாளர்
30. 07. 2021