இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு வரும் 11.10.2021. திங்கட்கிழமை மாலை 5.00 மணி அளவில் அறங்காவலர் திருமிகு M. முத்துசெல்வராஜா அவர்களின் மடிப்பாக்கம் இல்லத்தில் நடைபெறும். அனைத்து நண்பர்களும் சிரமம் பாராமல், தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
இந்த சந்திப்பில் நமது பேரவைத்தலைவர் திருமிகு மா. கருண் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிகழ்வுகள்:-
1) 17.10.2021 ஞாயிறு சிவகங்கை *சந்திப்போம் ! சிந்திப்போம் !* நண்பர்கள் சந்திப்பு நிகழ்வில் சென்னை மாவட்ட நண்பர்கள் பங்கேற்பு.
2) பேரவை நண்பர் எம். செல்வசதீஷ் பரிந்துரையில், ஏழை மாணவி ஈ. பிரிசில்லா அளித்துள்ள கல்வி உதவித்தொகை வேண்டிய விண்ணப்பம் தலைவரின் பரிசீலனைக்கு வைத்தல்.
3) வெள்ளிவிழா நட்புசங்கமம் குறித்த ஆலோசனை.
4) மூன்று ஆண்டுகள் உறுப்பினர் தகுதிக்கட்டணம் செலுத்தாத நண்பர்கள் விரைந்து செலுத்த வேண்டுதல்.
தலைவர் அனுமதியுடன் பிற விவாதங்கள்.
ரெ. சுரேஷ், அமைப்பாளர்,
சென்னை மாவட்டப் பேரவைக் கிளை.
07.10.2021
======================================================================================================
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
சென்னை மாவட்டப் பேரவைக்கிளை மாவட்டப் பேரவை நண்பர்கள் சந்திப்பு 11.10. 2021. திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் ரெ. சுரேஷ், அறங்காவலர் திரு. முத்து செல்வராஜா, மூத்த உறுப்பினர் எஸ். வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.
17.10.2021 ஞாயிறு சிவகங்கை சந்திப்போம் ! சிந்திப்போம் ! நிகழ்வில் சென்னை மாவட்ட நண்பர்கள் பங்கேற்பு தீர்மானிக்கப்பட்டது. பேரவை நண்பர் எம். செல்வசதீஷ் பரிந்துரையில், ஏழை மாணவி ஈ. பிரிசில்லா அளித்துள்ள கல்வி உதவித்தொகை வேண்டிய விண்ணப்பம் தலைவரின் பரிசீலனைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டு மாணவியின் தாயாரிடம் முழு ஆண்டு கல்விக் கட்டணத்திற்கான காசோலை [ ₹ 6400/_ ] வழங்கப்பட்டது.
வெள்ளிவிழா நட்புசங்கமம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பணிகளை முன்னெடுத்துச் செயல்படுத்த குழு அமைத்து, பணிகளை பிரித்தளிக்க தீர்மானிக்கப்பட்டது. சங்கம சிறப்பு மலருக்கு விளம்பரங்கள் சேகரிக்கவும், படைப்புகள் அனுப்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. சிறப்பு மலருடன் இணைப்பாக தகுதி வாய்ந்த தண்பர்களின் விரிவான தன் குறிப்பு புத்தகம் தயாரித்து வழங்க விரும்புவதாக பேரவை நண்பர் ஞானசி {தீபம் பதிப்பகம்} ஆவல் தெரிவித்ததை பேரவைத் தலைவர் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.
நண்பர் இளவேனில் பாரதி நன்றியுரையாற்ற தேனீர் விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.
ரெ. சுரேஷ், அமைப்பாளர், சென்னை மாவட்டப் பேரவைக் கிளை, 12.10.2021.