இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை 9892035187
கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை
நண்பர்களே நாளை நடக்கவுள்ள நமது பேரவையின் கலந்துரையாடல் கூட்டம் பற்றி :
இடம் : ஓசூர் ஸ்வாதி பள்ளி வளாகம் காமராஜ் காலனி
நாள் : 10.10.21. நேரம்: காலை 10.30.
சிறப்புச் செய்தி : நாளை கூட்டத்தில் கலந்து கொள்ளும் நமது பேரவை நண்பர்களுக்கு பரிசுப் பொருளாக
1. D' Mart Brand Best Hand Towel*
2. ₹ 80 மதிப்புள்ள ஆயுர்வேத விஞ்ஞான முறையில் (100Gm) தயாரிக்கப்பட்ட சிறப்பான துளசி டீ தூள் வழங்கப்படும்.
அனைவரும் அவசியம் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
பேரவையின் அன்புத் தலைவர் மனிதநேய மாமணி திரு. மா.கருண் அவர்கள் நம்மோடு உரையாட வாய்ப்புள்ளது.
நன்றி : கூட்டத்திற்கு இடம் மற்றும் ஆலோசனை : பேரவை நண்பர் டாக்டர் சரவணன் ,ஸ்வாதி பள்ளி தாளாளர்.
முனைவர் சி.சிவ.பிரேம்பிரகாஷ், துணைத்தலைவர்.
மா. மோகன், அமைப்பாளர்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை
================================================================================================
10.10.21 ஞாயிறு காலை 10.30 மணிக்கு பேரவையின் கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை நண்பர்கள் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் , பேரவை நண்பர் டாக்டர் சரவணன் அவர்களின் ஸ்வாதி பள்ளி வளாகத்தில், பாவலர் கருமலைத் தமிழாழன் தலைமையில் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் முன்னிலையில் நடை பெற்றது.
பேரவைத் தலைவரின் வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்க்கொண்டு பேரவையைக் கட்டிக்காத்து சிறப்பான முறையில் செயல்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை முன்னணியில் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது.
17.10.2021 சிவகங்கை மண்டலப் பேரவைக்கிளை சார்பாக நடைபெறவுள்ள "சந்திப்போம் ! சிந்திப்போம்!" நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை நண்பர்கள் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பயனாடை, மற்றும் துளசி டீ பவுடர் வழங்கப்பட்டது.
துணைத்தலைவர் பேரவையின் செயல்பாடுகள் மற்றும் பேரவைத் தலைவரின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கவுரையாற்றினார்.மாவட்ட அமைப்பாளர் மா. மோகன் நன்றியுரையுடன் நிகழ்வு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கூட்டத்தில் 25 நண்பர்கள் கலந்து கொண்டனர்.
3 நண்பர்கள் புதிதாய் இணைவதற்காக.
நண்பர்கள் குப்புசாமி, பாவலர் அறிமுகத்துடன் கலந்து கொண்டனர்.
நண்பர்கள் திருமதி ந. மீனாட்சி, குப்புசாமி, அறம் கிருஷ்ணன், ரெத்தினராஜ் ஆறுமுகசாமி,மனுநீதிச்சோழன், புதிய நண்பர்கள் ஜெகநாதன், ரவி ஆகியோர் பேரவையின் சிறப்பும், வளரவேண்டிய அவசியமும் நமது கடமைப் பற்றியும் பேசினார்கள்.
நிகழ்வின்போது நமது அன்புத்தலைவர் அவர்கள் காணொளி மூலம் அனைத்து நண்பர்களிடமும் தனித்தனியாக உரையாடி, வாழ்த்தியது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.
முனைவர் சி. சிவ. பிரேம்பிரகாஷ்
துணைத்தலைவர்.
மா. மோகன், மாவட்ட அமைப்பாளர்.
12. 10. 2021