தலைமை ஒப்புதலுடன், பேரவைக் குடும்ப அங்கங்களின் தகவலுக்காக:
பேரவைத் தலைவர் மனிதநேய மாமணி மா. கருண் அவர்கள் நல்லாசியுடன், திருச்சி மண்டல பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு 10.10 .2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நமது பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் அவர்கள் தலைமையிலும் அறங்காவலர் திரு கந்தன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.
இடம்: ஸ்ரீமன் மத்வ சித்தாந்த சபா
50 மேலப்புலிவார் ரோடு, தேவர்ஹால் எதிர்ப்புறம்.
ஆலோசனைச் செய்திகள்:
திருச்சி மண்டல நண்பர்களின் பேரவை ஈடுபாடு.
வெள்ளிவிழா சங்கமம் - திருச்சி மண்டல பேரவை நண்பர்களின் பங்களிப்பும், பங்கேற்பும்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை கிளைகள் சீரமைப்பு குறித்த தலைமையின் தீர்மானங்கள்.
17. 10. 2021 ஞாயிறு மாலை 4 மணிக்கு பேரவைத் தலைவர் பங்கேற்புடன் சிவகங்கையில் நடைபெறவிருக்கும் பேரவைக் குடும்ப உறவுகளின் " சந்திப்போம் ! சிந்திப்போம் ! " பெருநிகழ்வில் திருச்சி மண்டல நண்பர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது.
புலவர் அனுமதியுடன் பிற விவாதங்கள்.
அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்.
குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பா. மனோகரன், அமைப்பாளர்
திருச்சி மண்டலம்
புலவர் தியாகசாந்தன்
தேசிய ஒருங்கிணைப்பாளர்
இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை. 9892035187
திருச்சி மண்டல பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு.
=======================================================================================================
திருச்சி மண்டல பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு 10.10 .2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் அவர்கள் தலைமையில் மண்டல அமைப்பாளர் பா. மனோகரன், அறங்காவலர் ஆ. கந்தன் முன்னிலையில் ஸ்ரீமன் மத்வ சித்தாந்த சபா அரங்கில் நடைபெற்றது.
திருச்சி மண்டலப் பேரவை நண்பர்களின் பேரவை ஈடுபாடும், ஒத்துழைப்பும் அதிகம் தேவையென வலியுறுத்தப்பட்டது.
வெள்ளிவிழா சங்கமம் - திருச்சி மண்டல பேரவை நண்பர்களின் பங்களிப்பும், பங்கேற்பும் அதிகமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
பேரவைத் தலைமையின் " கிளைகள் சீரமைப்பு " குறித்த தலைமையின் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
17. 10. 2021 ஞாயிறு மாலை 4 மணிக்கு பேரவைத் தலைவர் பங்கேற்புடன் சிவகங்கையில் நடைபெறவிருக்கும் பேரவைக் குடும்ப உறவுகளின் " சந்திப்போம் ! சிந்திப்போம் ! " பெருநிகழ்வில் திருச்சி மண்டல நண்பர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. புலவர் தியாகசாந்தன், பா. மனோகரன், பி . ரவிச்சந்திரன், டி. பாலு, பி. கந்தவேல்,பி. கிருஷ்ணன், திருமழப்பாடி எம். ராஜா, தி. செங்குட்டுவன், வி. பெருமாள், பி. அய்யன பிள்ளை, ஆல்பர்ட் ஆறுமுகம் ஆகியோருடன் புதுக்கோட்டை எம்.என். குபேந்திரன், ஜி. அருங்குளவன் ஆகியோர் சிவகங்கை பங்கேற்பை உறுதி செய்துள்ளனர்.
மாவட்டக்கிளை நண்பர் ஏ. சாகுல் ஹமீது அவர்கள் முதுகலை சட்டப்படிப்பில் { Master in Law } தேர்ச்சி பெற்றமைக்கு பேரவைக்கிளை சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. புதிய நண்பர்கள் வி. பெருமாள்,பி. அய்யன பிள்ளை, ஆல்பர்ட் ஆறுமுகம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பும், வாழ்த்தும் பகிரப்பட்டது.
வாட்ஸ்அப் பேரவைத் தொடர்புகளில் உடனுக்குடன் பதிலளித்து அமைப்பு சார்ந்த நட்பு பேண அறிவுறுத்தப்பட்டது.
நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லாதவர்களையும், பேரவை ஈடுபாட்டில் ஆர்வம் காட்டாதவர்களையும் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்ய தலைமைக்கு பரிந்துரைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்தனர்.
மண்டல அமைப்பாளர் பா. மனோகரன் நன்றியுரையாற்ற, நண்பர் சாகுல் ஹமீது அளித்த தேனீர் விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
பா. மனோகரன், அமைப்பாளர்
திருச்சி மண்டலம்
13. 10. 2021