இந்தியப் பேனாநண்பர் பேரவை கரூர் மாவட்டக்கிளை சார்பாக இன்று [26.11.202] காலை 9.30 மணிக்கு லிங்கத்தூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும், 10.30 மணிக்கு காந்திகிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு கொரானா தடுப்பு முக கவசங்கள், கை கழுவும் சோப்புகளை மாவட்ட அமைப்பாளர் இரா. திருமூர்த்தி வழங்கினார்.
கடிதம் எழுதுவதின் முக்கியத்துவம், பயன்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கவுரையாற்றி அனைவருக்கும் அஞ்சல் அட்டைகளைப். பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்.
திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கும், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசாக நூல்கள் வழங்கினார்.
பேரவை நண்பர் ஆசிரியர் கு. பரணீதரன் நிகழ்வுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்தார்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.